சம்மாந்துறையில் இளம் மாணவியின் ஜனாஸா!

Sammanthurai-landmark

ஏ. அப்துல்லாஹ் 

சம்மாந்துறை  மல்கம்பிட்டி வீதி தல்அரம்மல 2ஆம் பிரதேசத்தில் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இளம் பெண்ணின் ஜனாஸா ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை தகவல்கள் தெரிவிக்கின்றது. இது கொலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மகள் ஒரு நபரை காதலிக்கிறார் எனவும் அந்த ஆணுடன் சுத்தித் திரிவதாகவும் அயலவர்கள் தந்தையிடம் தெரிவித்ததால் தந்தை வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த தனது மகளை சரமாரியாகத் தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளானதாள்தான் 17 வயதுடைய பாத்திமா ஜமாசா என்ற யுவதி உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது . சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடையில் மட்டும் இஸ்லாம் வந்துவிட்டால் போதும் என்று நினைக்கும் பலர் தமது குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சிறுபராயம் முதல் திரையுலகில் மூழ்கி இருப்பதையும் வானொலியில் புதைந்து கிடப்பதையும் கண்டு கொள்வதில்லை. திரையுலகும் , வானொலி பாடல்களும்தான் பல கும்பத்தின் உறுப்பினர்களை தவறான கனவுலகில் மிதக்க வழிகாட்டுகின்றது என்பதை பல பெற்றோர் கண்டுகொள்வதில்லை அவற்றுக்கு சில நேரங்களில் தாயும் , தந்தையும் ஆதரவு வழங்குகின்றனர்.

திரையுலகினதும் வானொலியினதும் சாதக, பாதகங்களை குழந்தைகளுக்கு உணர்த்துவதன் மூலம் அவற்றை பற்றிய சரியான நிலைப் பாட்டை குழந்தைகள் எடுப்பதற்கு பெற்றோர் வழிகாட்டுவது இல்லை இதன் விளைவாக குழந்தைகள் தாம் பார்பதை கேட்பதை எல்லாம் தமது சொந்த வாழ்கையில் செய்யமுற்படும்போது அவற்றை பல பெற்றோர் மிகவும் மூர்க்கமான முற்றிலும் தவறான வழிமுறைகளை கையாண்டு தடுக்கவும் முற்படுகின்றனர் அவ்வாறான ஒரு சம்பவத்தின் விளைவாக இதுவும் இருக்கலாம். மருத்துவம் செய்யவதை விட நோய் வராது தடுப்பதே மிக சிறந்தது. தவறான ஒரு மருத்துவமும் ஒரு பெரிய நோயே !!!

 

 

 

 

 

 

 

 

 

வீட்டில் சில மணித்துளிகளாவது ஒரு தந்தை குழந்தைகளுடன் இப்படி அமரலாம்!

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>