எடிசாலட் ஏற்பாடு செய்திருந்த அன்ட்ரொய்ட் கருத்தரங்கு!

Android-forum_

எடிசலாட் நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் அன்ட்ரொய்ட் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்குகளின்இரண்டாம் கட்ட நிகழ்வுகள் கடந்த 27ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வுக்கு அனைத்துதரப்பினரிடமிருந்து பெருமளவு வரவேற்பு கிடைத்திருந்தது. கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் முதலாவதுஅன்ட்ரொய்ட் கருத்தரங்கை எடிசலாட் ஏற்பாடு செய்திருந்தது.

இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இரு கட்டங்களாக கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது. மாலை வேளையில், அன்ட்ரொய்ட் தொழில்நுட்பம் குறித்த அடிப்படை அறிவுள்ளவர்களுக்கான கருத்தரங்கும், காலையில்அன்ட்ரொய்ட் வடிவமைப்பாளர்களுக்கான நிகழ்வும் இடம்பெற்றது.

கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் கடந்த 27ஆம் திகதி காலையில் இடம்பெற்ற கருத்தரங்கில் சுமார் 500க்கும் அதிகமான அன்ட்ரொய்ட் வடிவமைப்பில் ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் போன்றோர் அடங்கியிருந்தனர்.

இந்த கருத்தரங்கில், இரு விதமான ஆப்ளிகேஷன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தன. அன்ட்ரொய்ட் ஓஎஸ்,எச்டிஎம்எல்5 மற்றும் அன்ட்ரொய்ட் தொடர்பான இதர முக்கிய விடயங்கள் குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் புதிய சிந்தனைகளை ஆப்ளிகேஷன் வடிவில் மாற்றியமைப்பது குறித்தும் நவீன காலத்தில் வெளிவரும் தொலைபேசிகளின் வன்பொருள் கட்டமைப்பு குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

மாலை வேளையில் இடம்பெற்ற கருத்தரங்கில், அன்ட்ரொய்ட் தொடர்பான அடிப்படை விடயங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த கருத்தரங்கின் போது, அன்ட்ரொய்ட் வளர்ச்சியடைந்துள்ள விதம், இதன் முக்கியத்துவம், மற்றும் நடைமுறை வாழ்க்கையில் இதன் பயன்பாடு குறித்த விடயங்கள் ஆராயப்பட்டிருந்தன.

எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க இந்த இரண்டாம் கட்ட அன்ட்ரொய்ட்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், “நாம் தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கு முக்கியத்துவம்வழங்கி வருகிறோம். கடந்த முறை நாம் முன்னெடுத்திருந்த அன்ட்ரொய்ட் கருத்தரங்கு நிகழ்வுக்கு பெருமளவானவரவேற்பு கிடைத்திருந்தது. இம்முறை நாம் இரு வகையாக இந்த நிகழ்வை பிரித்து பங்குபற்றுபவர்களுக்குஅதிகம் நன்மை பயக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். இம்முறை சர்வதேச ரீதியில்pருந்துவிளக்கங்களை வழங்குவதற்காக நாம் கூகுள் நிறுவனத்தை சேர்ந்த மிஷா செல்ட்சர் அவர்களை வரவழைத்திருந்தோம்”என்றார்.

மிஷா செல்ட்சர் கூகுள் அனலிட்டிக்ஸ் பிரிவைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஆவார். இவர் இஸ்ரேலிலுள்ள கூகுள் நிறுவனத்தின் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி பிரிவில் கடமையாற்றி வருகிறார். இவர் அன்ட்ரொய்ட் மென்பொருளின் பயன்பாடு குறித்த விளக்கங்களை வழங்கியிருந்தார். இவர் கருத்து தெரிவிக்கையில், “இலங்கைக்கு இது மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். இலங்கையை சேர்ந்த மென்பொருள் வடிவமைப்பு சமூகமானது வளர்ச்சி கண்டு வருகிறது, இலங்கையில் சிறந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன”என்றார்.

இவருக்கு மேலதிகமாக டொப் மோஸ்ட் லைன் (பிரைவேட்) லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் தாரக தென்னகோன், திங்க்கியுப் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணைத் தாபகர் புத்திக சித்திசேன, ஹ{வாவெய் நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மைக் மெக்டொனால்ட் மற்றும் மைக்குரோஇமேஜ் மொபைல் மீடியா நிறுவனத்தை சேர்ந்த பிரதம தொழில்நுட்ப அதிகாரி சண் சின்னதம்பி ஆகியோர் தமது உரைகளை வழங்கியிருந்தனர். பெருமளவான பங்குபற்றுநர்கள் இந்த கருத்தரங்குகளை வரவேற்றிருந்தனர்

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>