அட்டாளைச்சேனை: தோணியிலிருந்து தவறி வீழ்ந்து மாணவன் மரணம்

dc995f032d27c43a7a7a3403aa94e84f-230x230

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையில் தோணியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் ஆற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை 13ஆம் பிரிவு ஜி.சி.ரி. வடக்கு வீதியை சேர்ந்த அட்டாளைச்சேனை தேசிய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் அஸ்ரப் அப்பிலால் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

தனது வீட்டிற்குச் செல்வதற்காக அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு கரையிலிருந்து 13ஆம் பிரிவு கரைக்கு கோணவட்டை ஆற்றினூடாக இம்மாணவன் தனியாக தோணியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தோணியின் துடுப்பு ஆற்றில் தவறி வீழ்ந்துள்ளது. இதனை எடுப்பதற்கு முயற்சித்தபோதே இம்மாணவன் தோணியிலிருந்து தவறி ஆற்றில் வீழ்ந்து மரணமடைந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>