குர் ஆன் கிதாபுகளை எரித்த காடைத்தனமான அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

apkaan.bmp-for-web-normal

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் புனித அல் குர் ஆன் கிதாபுகள் உட்பட பெருந்தொகையான மார்க்க நூல்களை எரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம் பெற்றுள்ளன

அமெரிக்காவுக்கு எதிரான சுலோகங்களை கூறிய ஆத்திரம் கொண்ட ஆப்கானிய மக்கள் காபூலிலும்,அமெரிக்க விமான படை தளமான பக்ராமுக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் செய்தனர்

விமானப்படை தளத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஓர் ஆப்கானியர் காயமடைந்தார்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்தில் தான் பணி புரிந்த போது புனித குர் ஆண் ஷரீபுகளை அமெரிக்க படைகள் எரித்தததை எதிர்ப்பு தெரிவித்த  அங்கு பணி புரிந்த ஆப்கானியர் இருவரை அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றதாகவும்  ஐந்து பேரை காயப்படுத்தியதாகவும் அந்த முகாமில் பணி புரிந்த முஹமது நபி எனும்  ஊழியர் கூறினார்

இது போன்ற ஆர்பாட்டங்கள் ஆப்கானிஸ்தானின் வெவேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளன

இதேவேளை புனித குர் ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமைக்கு மனிப்பு கேட்பதாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் அமெரிக்க தளபதியான ஜெனரல் ஜோன் ஆர் .அலென் கூறியுள்ளார். தாம் இது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறினார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>