சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய வங்கி முறைமை கற்கை நெறிகள் அறிமுகம்

112

சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறைமை கற்கை நெறிகள் ஜாமியாஹ் நளீமியஹ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் தெரிவித்தார்.

இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறை: கோட்பாடும் பிரயோகமும் எனும் தொனிப்பொருளிலான இரண்டு நாள் வதிவிட செயலமர்வு அண்மையில் பேருவளை ஜாமியாஹ் நளீமியஹ் கலாபீடத்தின் அபிவிருத்தி மற்றும் ஆய்வு பணிகளுக்கான பயிற்சி மன்றத்தில்; இடம்பெற்றது.

இச்செயலமர்வின் இறுதியிலேயே மேற்கண்டவாறு அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் பிரகடனப்படுத்தினார்.

பேருவளை ஜாமியாஹ் நளீமியஹ் கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் இஸ்லாமிய வங்கிகளின் தோற்றமும் வளர்ச்சியும், இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி சேவைகள், இஸ்லாமிய வங்கி முறைமை கட்டமைப்பும் கணிப்பீட்டு முறைகளும், பாரம்பரிய இறை வரி சட்டங்களும் இஸ்லாமிய வங்கிகள் எதிர்கொள்ளும் சவால்களும், மத்திய வங்கியின் சட்ட திட்டங்களும் இலங்கையில் இஸ்லாமிய வங்கிமுறையும், ஷரியாஹ் ஆலோசகர்களின் கடமை பொறுப்புகளும் என பல்வேறு தலைப்புகளில் அமர்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

அத்துடன்பங்களாதேஷ் இஸ்லாமிய வங்கியின் பிரதி தலைவர் அப்துல் மாலிக் சௌத்திரி, ஜாமியாஹ் நளீமியஹ்வின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஹார் முஹம்மத், மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் உஸ்தாத் மன்சூர், உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் அஷ்ஷெய்க் மிப்லிஹ், தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நபீஸ், புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அஷ்ஷெய்க் அமீர் மற்றும் விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் அஷ்ஷெய்க் முயினுடீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறைமை செயலமர்வுகளையும்   கருத்தரங்குகளையும் நடத்தவுள்ளதாக ஜாமியாஹ் நளீமியஹ் கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி டி.எம் ஷாகிர் செயலமர்வின் இறுதில் குறிப்பிட்டார்.

 

 

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய வங்கி முறைமை கற்கை நெறிகள் அறிமுகம்

 1. Vote -1 Vote +1Kaneem MA
  says:

  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  “மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும்”
  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

  “மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர்”.
  (அபூஹுரைரா (ரழி) புகாரி)

  “வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை”.
  (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம் )

  நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
  இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக!
  (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>