ஹக்கீமுடன் மஹிந்த தொலைபேசியில் அவசரபேச்சு – தம்புள்ள பள்ளி விவகாரம் ஆராயப்பட்டது!

imagesCAINOGJE

தம்புள்ளயில் முஸ்லிம் பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் என்ற உத்தரவால் எழுந்துள்ள சர்ச்சை நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் அவசர தொலைபேசிக் கலந்துரை யாடலொன்றை நடத்தியிருக்கிறார்.

நேற்றுக்காலை தொலைபேசியூடாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் தொடர்புகொண்ட ஜனாதிபதி மஹிந்த, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் குறித்து நீண்டநேரம் பேச்சு நடத்தியதுடன், அந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்தும் வினவினார் என அறியமுடிகின்றது.

தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் விவகாரம் குறித்தான முஸ்லிம் மக்களின் மனநிலைமை, தாக்கம் என்பன பற்றி இந்தத் தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதிக்கு சிறு விளக்கமொன்றை அளித்திருக்கும் அமைச்சர் ஹக்கீம், இவை குறித்து விரிவாக ஜனாதிபதியுடன் நேரடிப் பேச்சு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளை ஏற்ற ஜனாதிபதி, இன்று அல்லது நாளைய தினம் தம்மைச் சந்திக்குமாறு தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதிக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பானது மிக முக்கியமானதாக இருக்குமென்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தம்புள்ளை பள்ளிவாசல் விடயம் குறித்தும் அந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றியும் முன்னதாகத் தமது ஆலோசகர்களுடன் ஜனாதிபதி மஹிந்த பேச்சுகளை நடத்தியுள்ளார் என நம்பகரமாக அறியமுடிகின்றது.(உதயன்)

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

2 Responses to ஹக்கீமுடன் மஹிந்த தொலைபேசியில் அவசரபேச்சு – தம்புள்ள பள்ளி விவகாரம் ஆராயப்பட்டது!

 1. Vote -1 Vote +1Human being
  says:

  The Monks who attacked the Mosque should be arrested and punished in order to not to repeat the same. Not only that they have
  taken the authority in their hand against to other race but also, violated and exceeded the law of Constitution of a social republic democratic country…

 2. Vote -1 Vote +1Sri Lanka Public Government party
  says:

  http://www.priu.gov.lk/Cons/1978Constitution/Introduction.htm

  The Monks who attacked the Mosque should be arrested and punished in order to not to repeat the same. Not only that they have
  taken the authority in their hand against to other race but also, violated and exceeded the law of Constitution of a social republic democratic country…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>