இஸ்ரேலுடன் கை கோர்க்கும் இலங்கை : அரசின் இரட்டை வேடம்

lanka_israel

தினகரன் :பாலஸ்தீன நாட்டின் நண்பன் முஸ்லிம்கள் எமது உறவுகள் என்று சொல்லும் எமது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இன்று முஸ்லிம்களின் பொது எதிரியான இஸ்ரேலுடன் கை கோர்க்கின்றார்
தம்புள்ள பிரச்சினை இன்னும் முடிவுறாத நிலையில் முஸ்லிம்களை புண்படுத்தும்  அடுத்த முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது இலங்கையில் 30 வருட காலமாக நிலவி வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப் பட்டதையடுத்து, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வரவேற்கத் தக்க பாரிய முன்னேற்றங்கள் ஏற் பட்டுள்ளன.

இனங்களிடையே நல் லிணக்கம் காணப்படுவதுடன், அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சுதந்திர மாகவும் இருப்பதனை நேரடியாக காணமுடிந்ததையிட்டு இலங்கையின் நட்பு நாட்டின் பிரதிநிதியென்ற வகை யில் நான் பெருமகிழ்ச்சியடைகின் றேன் என இலங்கை மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் அஸ்மன் உஷ்பிஷ் கூறினார். தினகரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை – இஸ்ரேல் பொருளாதாரம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வளர்ச்சியடையுமென நம்பிக்கை தெரிவித்த இஸ்ரேல் தூதுவர், இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நேரடி விமான சேவையினை விரைவில் ஆரம்பித்து வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எதிர்காலத்தில் இலங்கை யர்களுக்கு இஸ்ரேலில் அதிக வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படு மெனவும் அவர் உறுதியளித்தார்.

ஒவ்வொரு நாடும் தனித்துவமான இலங்கை பற்றிய அவர்களின் அபிப் பிராயங்கள் வித்தியாசப்படலாம். ஒரு ஜனநாயக நாட்டைப் பற்றி தனிப்பட்ட கருத்தினை முன்வைக்க எனக்கு உரிமை யில்லாத போதும், மோதல்களுக்குப் பின்னர் ஒரு நாட்டிற்கு நிரந்தர சமா தானமும் நல்லிக்கணமும் தேவையென் பதனை நான் வலியுறுத்திக்கூற விரும்பும் அதேவேளை, நட்பு நாடு என்ற வகை யில் இவற்றினை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோமெனவும் அவர் தெரிவித்தார்.

மோதல்கள் காரண மாக எமக்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளதனால் தற்போதைய இலங்கை யர்களின் உணர்வுகளை எம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது என்றும் கூறினார்.

தான் இலங்கையில் தங்கியிருந்த காலகட்டத்தில் இலங்கை வாழ் முஸ் லிம்கள் மிகவும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் தமது குடும்பதினருடன் எமது இடங்களுக்குச் சென்று பொழுதைக் களிப்பதனை தான் கண்டிருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை – இஸ்ரேல் வர்த்தகர்களி டையே அறிவு, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பரி மாற்றங்களை முன்னெடுக்க எதிர்காலத்தில் வர்த்தக சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படு மெனவும் அவர் கூறினார்.

பொருளாதாரம்

மூன்று வருடங்களுக்கு முன்னர் 68 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவிருந்த இலங்கை – இஸ்ரேல் பொருளாதாரம் தற்போது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வளர்ச்சியடைந்துள்ளது. நாம் எமது இலக்கை அடைவதற்காக இரு நாடுகளினதும் வியாபார சமூகத் தினரிடையே பரிமாற்றங்களை ஏற்படுத்து வது குறித்து கவனத்திற்கொள்ள வுள்ளேன்.

விவசாயம், உயர் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பினை வழங்கி வருகிறோம். எதுவுமே முழுமையாக வெற்றி பெறு வதற்கு இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கான வர்த்தகர்கள் ஒருவருக்கொருவர் முன்வருதல் அவசியமென வலியுறுத்திய தூதுவர், எதிர்காலத்தில் அதற்கு பல்வேறு வழி களிலும் ஒத்துழைப்பு வழங்குவோமென வும் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை

நேரடி விமான சேவை ஆரம்பிப்பது குறித்து இரு அரசாங்கங்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும். இதற்கும் வர்த்தக சமூகத்தினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமெனவும் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு

நூற்றுக் கணக்கான இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர். இவர் களுக்கு மாதமொன்றுக்கு ஆகக் குறைந்தது ஆயிரம் அமெரிக்க டொலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலன்புரியினை முழுமை யாக பெற்றுக் கொடுக்கும் வகையில் உறுதியான சட்டத்தினை எமது அரசாங்கம் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் கட்டுமானப் பணிகள் தொடர்பான பல வேலை வாய்ப்புகள் இலங்றைணுகயர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>