லிபியாவில் இஸ்லாமிய கட்சிகளுக்கு அனுமதி

islamic uprisin in libya

லிபியாவில் மத, இன மற்றும் பிராந்திய அடிப்படையில் அரசியல் கட்சி அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள முதலாவது சுயாதீன தேர்தலில் இஸ்லாமிய கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக லிபிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது.இது தொடரும் இஸ்லாமிய புரட்சிக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்

லிபிய அரசியல் கட்சிகள் தொடர்பாக அந்நாட்டு இடைக்கால அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பாக இடைக்கால அரசின் நீதிபதிகள் குழு நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் சட்டம் உள்ளடக்கப்படவில்லை.

லிபியாவில் மக்கள் கிளர்ச்சியின் மூலம் முஅம்மர் கடாபி அரசு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின் அங்கு முதல் முறையாக சுயாதீன தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

200 ஆசனங்களுக்கான சட்ட சபை தேர்தலில் 80 ஆசனங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு எஞ்சிய ஆசனங்கள் சுயாதீன வேட்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இந்த சட்ட சபை தேர்தல் மூலம் லிபியாவில் நிரந்தர அரசு மற்றும் புதிய அரசியல் அமைப்பை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் லிபியாவில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பலம் வாய்ந்த அமைப்பாக இயங்கி வருவதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே துனீஷியா, எகிப்து மற்றும் மொரோக்கோ நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு பின்னரான சுயாதீன தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் லிபியாவில் முஅம்மர் கடாபி அரசுக்கு ஆதரவாக செயற்படவோ, பேசுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இடைக்கால அரசு எச்சரித்துள்ளது.

“முஅம்மர் கடாபிக்கு, அவரது அரசுக்கு, சிந்தனைக்கு மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஆதரவாக செயற்படுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும்” என்று இடைக்கால அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, பெப்ரவரி 17 மக்கள் எழுச்சி மற்றும் இஸ்லாம் மதம் அல்லது நாட்டை அவமதிக்கும் வகையில் செயற்படுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றம் எனவும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>