4500 கிலோ மீட்டர் நடந்தே சென்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழு

haj-team-270x170

குலாப்/தஜிகிஸ்தான் முன்னாள் தடகள வீரர் அப்துல் அஜீஸ் ராஜபோவ்(60) தலைமையிலான ஏழு பேர் அடங்கிய நடைபயண குழு முஸ்லிம்களின் இறுதி கடமையான ஹஜ்ஜை நடந்து சென்று  மேற்கொள்ள திட்டமிட்டு பயணத்தைத் துவக்கியுள்ளன.

நான்காயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் தூரத்தையும் எட்டு நாடுகளின் எல்லைகளையும் கடக்க வேண்டிய இப்பயணத்தில் பங்குப்  பெற்றுள்ளவர்களில் அப்துல் அஜீஸ் ராஜபோவ் தவிர மற்ற அனைவரும் முதல் முறையாக நடைபயணம் மூலம் ஹஜ் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அப்துல் அஜீஸ் ராஜபோவ் உட்பட இக்குழுவில் மொத்தம் ஆறு பேர் அறுபது வயதை தாண்டியவர்கள் இக்குழுவில் 21 வயதுடைய ஒரு இளைஞரும் உள்ளார்.

இக்குழு தற்பொழுது ஆப்கான் நாட்டின் எல்லையை அடைந்துள்ளது. இக்குழு பயணம் திட்டமிட்டபடி சென்றால் இக்குழு வரும் அக்டோபர் மாதம் மக்கா நகரை அடையும், இக்குழு தஜிகிஸ்தானில் இருந்து வரும் 6000 ஹஜ் பயணிகளுடன் இணைந்து கொள்ளும் என எதிபார்க்கப்படுகின்றது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>