கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை இன்று காலமானார்

0011

(றிப்தி அலி, ஹனீக் அஹமட்) – TM

கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர் மசூர் சின்னலெப்பை (வயது 54) இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.

கடந்த இரு தினங்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.ஜெமீல் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தற்பொழுது கொழும்பில் உள்ள இவரது ஜனாஸா அவரது சொந்த ஊரான அட்டாளைச்சேனைக்கு கொண்டு செல்லவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக எம்.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான மசூர் சின்னலெப்பை, கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினராகப் பதவி வகுப்பதற்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக மசூர் சின்னலெப்பை கடமையாற்றினார்.

1994 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் அரசியலில் களமிறங்கிய இவர், அந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவராக  தெரிவாகியிருந்தார்.

இவ்வாறு அரசியல் ரீதியாக பல்வேறு பதவிகளை வகித்த இவர் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண தலைவராகவும் சில காலம் கடமையாற்றினார்.

அரசியலுக்கு அப்பால், ஒரு தொழிலதிபராக திகழ்ந்த இவர் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை இன்று காலமானார்

  1. I think other web-site proprietors should take this site as an model, very clean and fantastic user genial style and design, let alone the content. You are an expert in this topic!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>