சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு திறந்த மடல்

CEYLINCO-PROFIT-SHARING-DEPOSITORS’-ASSOCIATION-300x62

சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கத்தினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள திறந்த மடல்.

சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம்

இல. 17, சுமனராம றோட். கல்கிஸ்ஸ

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கான திறந்த மடல்

29 மே 2012

அல்ஹாஜ் றிஸ்வி முப்தி அவர்கள்

தலைவர்,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

கொழும்பு 10

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்தக்கடிதத்தை நாம் மிகுந்த கவலையுடன் எழுதுகின்றோம். எமது எண்ணற்ற மரியாதை மற்றும் வேண்டுதல்கள் இடம்பெற்ற போதும் ஸ்ரீலங்காவின் இஸ்லாமிய வங்கி என நன்கு அறியப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு கம்பணியில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அ.இ.ஜ. உலமா எத்தகைய முயற்சிகளையும் செய்யவில்லை.

கடந்த 2009 செப்டம்பர் மாதம் முதல் நாம் அ.இ.ஜ உலமா நிர்வாக சபையை பல தடவைகள் சந்தித்துள்ளோம். அப்போதெல்லாம் மேற்படி இலாப பங்கீட்டில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அவர்கள் சார்பாக அ.இ.ஜ உலமா முனைப்புடன் செயற்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் இதற்கான எந்த வித அடிப்படை அழுத்தங்களையோ முயற்சிகளையோ மேற்படி முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அ.இ.ஜ உலமா சபை முன்னெடுக்கவில்லை. இதன்காரணமாக ஏழை முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக இதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சிலிங்கோ இலாப பங்கீட்டு இஸ்லாமிய பிரிவின் ஆரம்பத்திலிருந்தே அதனை வளர்ப்பதற்காக அ.இ.ஜ உலமாவின் பிரச்சாரம்

ரமழான் மாதத்தின் ஸஹர் வேளையில் வானொலியூடாக அ.இ.ஜ உலமாவின் பல அங்கத்தவர்கள் சிலிங்கோ இ.ப.இ பிரிவை ஆர்வமூட்டி பிரச்சாரம் செய்தார்கள் என்பது மிகவும் தெரிந்த விடயம். அ.இ.ஜ.உ. அங்கத்தவர்கள் இ.ப.இ பிரிவைப்பற்றி பேசியதோடு முஸ்லிம்களை அதில் முதலீடு செய்யும்படி ஆலோசனை வழங்கினார்கள். பல சந்தர்ப்பங்களில் சி.இ.ப இ பிரிவின் கிளைகளை நாடு தோறும் திறப்பதற்காக அ.இ.ஜ. உலமா அங்கத்தவர்கள் சி.இ.ப.இ பிரிவின் முகாமைத்துவத்துடன் கலந்து கொண்டனர். இவற்றை திறந்த பின் உலமாக்களின் உரைகள் ஏழை முஸ்லிம்களை இந்த நிறுவனத்தின் பால் ஈர்த்தன. பொதுவாக முஸ்லிம் சமூகம் வங்கி உரிமையாளர்கள் பற்றி ஓரளவே தெரிந்திருந்த நிலையில் சமயத்தலைவர்கள் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடியவர்கள் என உயரிய மதிப்பை அளித்ததுடன் அவர்கள் மீது நம்பிக்கையும் வைத்திருந்தனர்.

அ.இ.ஜ. உலமாவினால் நியமிக்கப்பட்ட ஷரியா பிரிவின் கவலையீனம், அறியாமை.

சி.இ.ப.இ பிரிவு தனது பணமாற்றுதல்களில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை பேணுகிறதா என்பதை கவனிப்பதற்காக அ.இ.ஜ. உலமா சபை ஷரியா பிரிவை நியமித்தது. (இதன் அங்கத்தவர்களாக மறைந்த நியாஸ் மௌலவி, யூசுப் முப்தி, அப்துல் நாசர் மௌலவி, சலாஹுத்தீன் மௌலவி, பாசில் பாரூக், லாபிர் மௌலவி ஆகியோர் இடம் பெற்றனர்). கவலைக்குரிய விசயம் என்னவென்றால் மேற்படி ஷரியா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்பதுடன் இது விடயங்களில் அறிவீனமாகவும், கவலையீனமாகவும் நடந்து கொண்டார்கள். ஷரியா பிரிவால் ஏற்பட்ட மறுக்க முடியாத சில விளைவுகள் பின்வருமாறு

  1. 1988ம் ஆண்டின் நிதிச்சட்டப்படி மத்திய வங்கியல் பதியப்படாத எந்தவொரு நிறுவனமும் பொது மக்களிடமிருந்து பணத்தை பெறமுடியாது. சி.இ.ப.இ பிரிவு நிதி சட்டத்தின்படி பதிவு செய்யப்படவுமில்லை என்பதுடன் நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறியுள்ளது. நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறிய ஒரு நிறவனத்தை அ.இ.ஜ.உ. சபை எவ்வாறு வளர்த்தது என்பது ஆச்சரியமாக உள்ளது.
  2. பல சந்தர்ப்பங்களில் சி.இ.ப.இ பிரிவு தம்மை ஹலால் தன்மைகளின் பக்கம் கொண்டு வரக்கூடிய வகையிலான செயற்திட்டங்களில் முதலீட செய்யவில்லை. சி.இ.ப.இ பிரிவு கொழும்பின் இரவு விடுதிகளில் முதலீடு செய்து அவற்றிலிருந்த இலாபங்கள் பெற்றது. இதுவே முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இலாபமாக வழங்கப்பட்டது. ஹலாலான உழைப்பை விரும்பும் நம்பிக்கையாளர்களான முஸ்லிம்கள் மீது ஷரியா பிரிவு துரோகம் செய்துள்ளது என்பது மிகத்தெளிவாக தெரிகிறது.
  3. ஷரியா பிரிவின் கடமைகளில் ஒன்றுதான் கொந்தராத்து மற்றும் உடன்படிக்கைகள் அல்லது விசேட பண மாற்றுதலில் சட்டப்படியான ஏனைய ஆவணங்கள் போன்றவற்றை பொருத்தமான ஒப்பு நோக்குதலும் நிர்ணய படுத்தலுமாகும். (ஷரியாவுக்கு பொருத்தமான மக்கள் குத்தகை வருடாந்த அறிக்கையிலிருந்து பெறப்பட்டது)
  4. சி.இ.ப.இ பிரிவின் மூலம் முதலீடு செய்யப்பட்ட அல்லது கடன் வழங்கப்பட்டவை சிலிங்கோ குழுமத்தின் கம்பணிகளாகும். இந்த சிலிங்கோ கம்பணிகள் ஷரியா வழிமுறைக்கெற்ப தமது வியாபாரங்களை கொண்டுள்ளதா என்பதற்கு (இன்று வரை) எந்த ஆதாரமும் இல்லை. மாறாக உலமா சபையின் ஷரியா பிரிவு இத்தகைய அனைத்து பண மாற்றுதல்களையும் அனுமதித்ததுடன் அவற்றுக்கு சாட்சியாகவும் இருந்தது.
  5. மேலும் இங்க குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சி.இ.ப.இ பிரிவுக்குரிய ஷரியா நிர்வாகத்தில் சேவையில் இருந்த சில உலமாக்கள் தங்களுக்கான தனிப்பட்ட கடன்களையும் பெற்றிருந்தார்கள். அ.இ.ஜ. உலமா சபை என்பது அதன் ஷரியா நிர்வாக அங்கத்தவர்களின் மிகச்சிறந்த ஒழுக்க மேன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். ஆனாலும் சாதாரண நிகழ்வுகளின் போதும் விளக்கங்களின் போதும் நீங்கள் தனிப்பட்ட இலாபங்களுக்குள் நுழைந்துவிட்டால் மூன்றாவது தரப்பின் நன்மைக்காகன குறிக்கோளின் அவசியத்தை நடைமுறைப்படுத்த உங்களால் முடியாது.

ஷரியா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றுமாயின் அது முஸ்லிம்களுக்கு உதவக்கூடியதாகவும் மிக சிறந்ததாகவும் இருந்திருக்கும். ஏனென்றால்

  • உலமாக்களின் ஆலோசனை என்பது உயிரோட்டமுள்ளதாகும் என்பதுடன் அவர்கள் வல்ல இறைவனின் கோட்பாட்டை நிறைவேற்றுபவர்கள். ஷரியா பிரிவால் சரியான முறையில் இறைவனின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லையாயின் அவர்கள் இத்தகைய முக்கியமான விடயங்களில் தலையிட்டிருக்கக்கூடாது. கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர் ஒருவர் இது பற்றி ஷரியா பிரிவை சேர்ந்த (புத்தளத்தை சேர்ந்த) மௌலவி ஒருவரிடம் கேட்டபோது தாங்கள் சி.இ.ப.இ பிரிவில் கஜானாவை திறக்க எமக்கு கடமையில்லை. என்றும் என்ன நடக்கின்றது என்பதை பார்போம் என்றும் கூறினார். அன்புள்ள முப்தி அவர்களே! இறைவனின் கோட்பாட இவ்விதம் சாதாரணமானதா?  மேற்படி ஷரியா பிரிவு உறுப்பினர் சொன்னதற்கிணங்க கஜானவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவும் கணக்குகளை கண்காணிக்கவும் கணக்கிடவும் எத்தனை முறைகள் உள்ளன. இந்த உயர்வான  விளக்கம் இன்றுவரை செல்லுபடியாகும் என்பதுடன் இஸ்லாமிய வங்கி சூழலில் உள்ள அனைத்து அகக்கட்டுப்பாட்டு சேவைகளையும் பொருத்த முடியும்.
  • இரண்டாவதாக, ஷரியா பிரிவின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களது ஒவ்வொரு கலந்து கொள்தலுக்கும் சி.இ.ப.இ பிரிவால் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதுவும் ஏழை முதலீட்டாளர்களின் பணம்தான். ஆகவே சரியான முறையின் கீழ் செயற்படுவதற்கான பொறுப்பும் கடமையும் ஷரியா நிருவாக உறுப்பினர்களுக்கு உண்டு.

அ.இ.ஜ. உலமா சபையும் அதன் ஷரியா பிரிவும் சி.இ.ப.இ பிரிவிலிருந்து வாபஸ் பெறல்

உங்களுடனும் உங்கள் உறுப்பினர்களுடனுமான எமது பல சந்திப்புக்களின் போது அ.இ.உ. சபையும் அதன் உறுப்பினர்களும் சி.இ.ப.இ பிரிவின் ஷரியா நிர்வாகத்திலிருந்து வாபஸாகி விட்டதாக காட்டுவதற்கே முயற்சித்தார்கள். ஆனாலும் அ.இ.ஜ.உ. சபை 29 ஒக்டோபர் 2008ம் திகதி சி.இ.ப.இ பிரிவுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதை நாம் அவதானித்தோம். அதுவும் அனைத்து பாதிப்புக்களும் நடந்தேறிய பின். நீங்களும் குறிப்பிட்டீர்கள் இ.ஜ உலமா இ.சி.இ.ப.இ பிரிவின் ஷரியா நிர்வாகத்திலிருந்து வாபஸ் பெற்று விட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக. ஆனாலும் நாம் ஆயிரரக்கணக்கான முதலீட்டாளர்களை சந்தித்துள்ளோம். அவர்கள் எவருமே இவ்வாறு அ.இ.ஜ. உலமாவின் வாபஸ் பெறல் சம்பந்தமான விளம்பரத்தை கண்டதாக சொல்லவில்லை. எவ்வாறாயினும் முஸ்லிம் சகோதரர்களில் மிக அதிகமானோர் தமிழ் பத்திரிகைகளையே வாசிப்பவர்கள் என்பதால் இவ்வாறான அதி முக்கிய விடயங்களை ஆங்கில பத்திரிகையில் மட்டும் பிரசுரம்மது முஸ்லிம் மக்களை கருத்திற்கொள்ளாமையே காட்டுகிறது. அதேபோல் இது சம்பந்தமாக அ.இ.ஜ.உ. சபை பொருளாதார தயாரிப்புகளுக்கான ஹலால் பத்திரம் வழங்கும் போது அல்லது அதனை செயலிழக்கச்செய்யும்போது அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்தல் கொடுப்பது போல் இது விடயத்தையும் அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்திருக்க வேண்டும்.  சமூகத்துடனான தொடர்புக்கு எந்தக்காலத்திலும் மிக சிறந்த வழியாக இதுவே உள்ளது.

சி.இ.ப.இ பிரிவின் ஷரியா நிர்வாகத்தினர் தற்போது ஏனைய இஸ்லாமிய வங்கிகளுடன் இரண்டற கலந்துள்ளனர்.

தற்போது சி.இ.ப.இ பிரிவின் ஷரியா நிர்வாகத்தில் இயங்கிய அ.இ.ஜ. உலமாவின் உறுப்பினர்கள் வேறு இஸ்லாமிய வங்கி நிறுவனங்களின் ஷரியா பிரிவுகளில் பணி புரிகிறார்கள். மேற்படி உலமா சபையின் உறுப்பினர்கள் சி.இ.ப.இ பிரிவில் இயங்கியபோது அவர்களின் அக்கறையின்மை மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதில் உலமா சபையும் அதன் தலைமையும் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு பகரமாக உலமா சபையின் இந்த உறுப்பினர்கள் தங்களால் பாதிக்கப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பாதிப்புக்களையெல்லாம் குப்பையில் போட்டு விட்டு இப்போது வேறு வங்கிகளை வளர்த்தெடுப்பதில் செயற்படுகிறார்கள்.

அடுத்த கேள்வியும், கோரிக்கையுமாவது. அதாவது, இந்த ஷரியா உறுப்பினர்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், சமூகமும் ஏனைய இஸ்லாமிய வங்கிகளும் இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான கண்காணிப்பை கொண்டுள்ளதா என்பதை கவனிப்பதற்குமுரிய தகுதிகளை இவர்கள் கொண்டுள்ளார்களா என்பதாகும். இத்தகைய முன்னாள் ஷரியா பிரிவு உறுப்பினர்கள் வேறு வங்கிகளில் பணிபுரிய முன் உலமா சபை இவர்களை விசாரணை செய்திருக்க வேண்டும்.

ஏழை முதலீட்டாளர்களின் கலக்கம்

சிலிங்கோ இ.ப.இ பிரிவில் தமது கடின உழைப்பினால் சேர்த்த பணத்தை முதலீடு செய்த ஏழை முதலீட்டாளர்கள் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மத்தியில் விதவைகள். ஓய்வு பெற்றவர்கள், தமது பெண்பிள்ளைகளின் திருமணத்துக்காகவும் பிள்ளைகளின் படிப்புக்காகவும் பணத்தை சேமிப்பிலிட்ட பெற்றோர் ஆகியோரின் எதிர் பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முஸ்லிம் அனாதைகள், வயதானவர்கள், வீடு மற்றும் பள்ளிவாயல்களுக்கான நிதிகளும் இதில் அடங்கியுள்ளன.  இந்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் அ.இ.ஜ உலமா சபையை மட்டுமே அறிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தமது பணத்தை முதலீடு செய்தது உலமா சபையின் பத்வா காரணமாகவே தவிர லலித் கொத்தலவலையின் மீதான நம்பிக்கையினால் அல்ல.

இந்த முதலீட்டாளர்களின் கலக்கம் பாரிய இருதய அழுத்தத்தை கொடுக்கிறது. நீங்கள் எம்மோடு இணைந்த வரவிருப்பமானால் நாம் உங்களை நாடு முழுவதும் அழைத்துச்சென்று மேற்படி முதலீட்டாளர்கள் எந்தளவுக்கு தாம் சிலிங்கோ இ.ப.இ. பிரிவில் முதலீடு செய்த பணத்தையும் இஸ்லாமிய நிதி நடவடிக்கையிலான உலமாக்களின் பத்வாவையம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு காட்ட முடியும். விதவைகள் வாழ வசதியற்ற நிலையில் தமது கணவரால் விடப்பட்ட பணத்தை இழந்து நிற்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்கள் தமது முழு வாள்நாள் உழைப்பையும் இழந்து நிற்கிறார்கள். பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கான திருமணத்தை நடத்த முடியாமல் உள்ளனர். இவையனைத்தும் சமூகத்தை பாரிய நெருக்கடிகளுக்கு இட்டுச்சென்றள்ளதால் அவற்றில் உலமா சபைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.

அ.இ. உலமா சபையிடமிருந்தான எதிர்பார்ப்புகள்

நாம் ஒரு குழுவாக எமது பணத்தை திருப்பி எடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அ.இ.ஜ. உலமா சபையும் செயற்படத்தக்க வகையில் இணைந்து கொள்ள வேண்டும். ஆனாலும் இது விடயத்தில் உலமா சபை எத்தகைய தெளிவான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இலங்கையில் வேறு பல இஸ்லாமிய வங்கிகள் உள்ளதால் அவற்றின் பல நிகழ்வுகளில் சிலிங்கோ இ.ப.இ பிரிவினரிடமிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் அவற்றிடம் கேட்டிருந்தோம். ஆனாலும் இந்த வேண்டுகோள் சம்பந்தமாக எந்த வித திருப்தியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இப்பிரச்சனைகள் பற்றி ஆராய சிலிங்கோ தலைவர் லலித் கொத்தலாவலையுடன் ஒரு சந்திப்புக்கான ஏற்பாட்டை செய்யும்படி நாம் உங்களிடம் கோரியிருந்தோம். ஏனென்றால் உங்களின் ஷரியா பிரிவு உறுப்பினர்கள் லலித் கொத்தலாவையுடன் ஒவ்வொரு சிலிங்கோ இ.ப.இ பிரிவின் கிளை திறப்பு நிகழ்வுகளுக்கும் கூடவே சென்றனர். ஆனால் முதலிட்டாளர்கள் சார்பில் நீங்கள் லலித் கொத்தலாவையை சந்திக்காமல் விட்டு விட்டீர்கள்.

பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா தனது மனைவியுடன் 140மில்லியன் ரூபா சிலிங்கோ இ.ப.இ. பிரிவில் வைப்பிலிட்டார் என்பது மிகவும் தெரிந்த விடயம். அந்தப் பணம் சிலிங்கோ இ.ப.இ. பிரிவிலிருந்து 2004ம் ஆண்டு பெறப்பட்டு விட்டது. காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுடன் தொடர்பு கொண்டு பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளாவை இது பற்றிய ஆலோசனைக்கு அழைத்து வரும்படி நாம் உங்களிடம் கோரினோம். ஏனென்றால் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதி என்பதால் பொது மக்களிடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியவர். இது விடயத்தில் அவருக்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு அ இ ஜ உலமா சபைக்கு உரிமை உண்டு. எனெனில் உலமா சபை முஸலிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எமது சமூகம் அல்லது சமூகத்தின் ஒரு பகுதி பாதிக்கப்படும் போது ஜம்இய்யத்துல் உலமா உறுதியாக முன் வருவது அவசியமானதாகும். எது எப்படியிருப்பினும் நீங்கள் இந்தக்கோரிக்கைகளை புறந்தள்ளி விட்ட நிலையில் உங்களது உலமா சபையின் உறுப்பினர்கள் டொக்டர் ஸாகிர் நாயக்குடன் இணைந்து காத்தான்குடியில் உள்ள ஹிஸ்புள்ளாவின் இல்லத்தில் பணத்தை பெருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

அன்பு முப்தி அவர்களே!

இந்த நாட்டில் குறிப்பாக ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்திருந்து பூமிக்கு வந்த போது கால் பதித்த இந்த நாட்டில் இஸ்லாமிய நிதி அபிவிருத்தியை காண நாம் அனைவரும் விரும்புகிறோம்.

இதற்காக என்ன தேவை என்றால் சரியான கண்காணிப்பும் வழிகாட்டலும் கொண்ட அமைப்பு அவசியம் தேவை, உங்களது உலமா சபை போன்று.

எனினும் நாம் எமது பணத்தை மீளப்பெறுவதில் இன்னமும் போராட்டத்தை விட்டு விடவில்லை. நாம் இந்தப்பணத்தை ஹலாலான வழியில் சம்பாதித்தோம் என்பதும் அதனை மீளப்பெறுவோம் என்பதும் எமக்குத்தெரியும். இது சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட நடவடிக்கைகளையும்  எடுக்கவுள்ளோம்.

எனினும் இது விடயத்தில் அ.இ.ஜ. உலமா சபை இன்னமும் மௌனமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு உதவுவதற்கும் இலங்கை முஸ்லிம்களின் குரலாக செயற்படுவதற்கும்  அ.இ.ஜ. உலமா சபை உறுப்பினர்களுக்கு அள்ளாஹ் தஆலா வழிவகுக்க வேண்டும்.

صدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار 

ஒரு சதக்கா என்பது தண்ணீர் நெருப்பை அணைப்பது போல் பாவத்தை அழித்து விடும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

வஸ்ஸலாம்

மும்தாஸ் றஹ்மான்——————————————————————–எம்.எஸ்.ஏ.எச். மொஹிதீன்

——–தலைவர்———————————————————————————–உதவிச்செயலாளர்

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு திறந்த மடல்

  1. As a Newbie, I am continuously browsing online for articles that can help me. Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>