பாடசாலைகள் சமுதாய ஆளுமை உருவாக்கத்திலும் ஒழுக்க விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்த வேண்டும்

zck

நேர்காணல்: எஸ்.எம் சஜாத் , எம்.எப்.எம் இஹ்ஸான்

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் A.ஆதம்பாவா அவர்கள் பற்றிய ஒரு சிறுகுறிப்பு:

1960ம் ஆண்டு சாய்ந்தமருது மெதர்மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் (கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில்) தனது ஆரம்பக் கல்வியைக் கற்று, 1966ம் ஆண்டு கல்முனை ஸாஹிறாவில் 06ம் தரத்திற்கு இணைந்தார்.

1970களில் க.பொ.த. (சா/த) பரீட்சையில் சித்தியெய்து, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்கும் காலப்பகுதியில் அவருக்கு கணித, விஞ்ஞான ஆசிரியர் நியமனம் கிடைத்தது. 1976ம் ஆண்டு க.பொ.த.(உ/த) இல் சித்தியடைந்து, 1983ம் ஆண்டு சிறப்பு பட்டதாரியாக நியமனம் பெற்றார். 1991ம் ஆண்டு கல்வியியல் டிப்ளோமா பரீட்சையில் சித்தியடைந்து அதே ஆண்டு அதிபர்  தரம் ii இல் சித்தியடைந்ததுடன் ஸாஹிறாவின் உதவி அதிபராக கடமையாற்றினார்.

1996ம் ஆண்டு இலங்கை அதிபர்  சேவை i இல் சித்தியடைந்தார். 2004.01.16ம் திகதி கல்முனை அல்-பஹ்றியா வித்தியாலயத்திற்கு அதிபராக நியமனம் பெற்று அங்கு ஆறு வருடங்கள் கடமையாற்றினார். அதன் பின்னர் ஸாஹிறாவில் இரண்டரை வருட காலம் உதவி அதிபராக கடமையாற்றினார். முன்னை நாள் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் 2012.05.27ம் திகதி ஓய்வு பெற்றதையடுத்து 2012.05.29ம் திகதி கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார். திறமை, சேவை மீட்பு அடிப்படையில் அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் கல்வி நிருவாக சேவை தரம் மூன்றில் தேறி இருக்கின்றார்.

கல்முனைக் குரல்: முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பிரதான நிறுவனங்களாக பள்ளிவாசல்களும், பாடசாலைகளும் இருக்கின்றன. பாடசாலைகள் சமுதாயக் கட்டுமானப் பணிக்கு தேவையான ஆளுமைகளை உருவாக்குகின்றன. இந்த வகையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு பாடசாலைகள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்கள்.

அதிபர்: ஒழுக்கம், ஆளுமை மேம்பாட்டுக்கு பாடசாலைகள் வழங்கும் பங்களிப்பு அளப்பரியதாகும். மாணவர்கள் தங்களது ஆளுமைகளையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் இங்கு பல்வேறு விதமான பயிற்சிகளை பெறுகின்றார்கள்.

கல்முனைக் குரல்: கல்முனை ஸாஹிறா கல்லூரி இலங்கையில் காணப்படும் முஸ்லிம் பாடசாலைகளில் முதன்மைப் பாடசாலைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தங்களது பாடசாலையைப் பற்றி கூறுங்கள்.

அதிபர்: நீங்கள் கூறியது போன்று கல்முனை ஸாஹிறா கல்லூரி இந்நாட்டின் முதன்மைப் பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்றது என்பதையொட்டி பெருமைப்படுகின்றோம். அண்மைக் காலங்களில் இந்நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற முஸ்லிம் மாணவர்களின் தொகையில், ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் கல்முனை ஸாஹிறாவிலிருந்து அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் 60 தொடக்கம் 70இற்கு இடைப்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். இறுதியாக வெளியாகிய க.பொ.த. (உ/த) பெறுபேறுகளின் அடிப்படையில் பொறியியல் துறைக்கு 11 மாணவகளும், மருத்துவத் துறைக்கு 04 மாணவர்களும், முகாமைத்துவத் துறைக்கு 07 மாணவர்களும், கலைத்துறைக்கு 06 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மோத்தமாக 70 இற்கு மேற்பட்ட மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர். கடந்த வருடம் 08 மாணவர்கள் பொறியியல் துறைக்கும், இரு மாணவர்கள் மருத்துவத் துறைக்கும், மொத்தமாக 64 மாணவர்கள்; பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர். முதன்முதலாக இக்கல்லூரியிலிருந்து 1968ம் ஆண்டு 03 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர். 1968 இலிருந்து இன்று வரை 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளனர்.

கல்முனைக் குரல்: கல்முனை ஸாஹிறா பொறியியல் துறைக்கு பெயர்போன பாடசாலையாக கருதப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்கின்ற முஸ்லிம் மாணவர்களில் கணிசமானவர்கள் இக்கல்லூரியின் உற்பத்திகளாகும். எனினும் ஏனைய துறைகளில் கல்முனை ஸாஹிறாவின் பெறுபேறுகள் அண்மைக்காலங்களில் தளம்பல் நிலையில் உள்ளது.

அதிபர்: ஸாஹிறாவின் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கின்றது. இதனால் அதிகமான மாணவர்கள் பௌதிக துறைக்கு அனுமதி பெறுகின்றார்கள். எண்பது மாணவர்கள் மருத்துவத் துறையில் படித்து 4 அல்லது 5 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதும், 20 மாணவர்கள் படித்து 1 அல்லது 2 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவதும் ஒப்பீட்டளவில் ஒன்றாக காணப்படுகிறது. படித்து பாடமாக்குகின்ற துறையாக மருத்துவத் துறை காணப்படுகின்றது. இதனால் பெண் மாணவர்கள் மருத்துவத் துறையில் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

கல்முனைக் குரல்:   சமூகவியலாளர்களை உருவாக்கும் துறையாக கலைத்துறை இருக்கின்றது. ஆனால் கல்முனை ஸாஹிறாவின் கலைத்துறையின் அடைவுகள் குறைவாக இருக்கின்றது. இதனால் சமூகவியலாளர்களுக்கு கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் வெற்றிடம் நிலவுகின்றது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன? கலைத்துறையில் மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றார்களா? கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு போதிய வாய்ப்புக்கள் இருக்கின்றதா?

அதிபர்: கலைத் துறையில் கற்பதற்கு இங்கு பல்வேறு விதமான வளங்கள் இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர் ஆளணி வளம் போதுமாக இருக்கின்றது. பெரிய பாடசாலைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுபவர்கள் உயிரியல் விஞ்ஞானம், பௌதிக விஞ்ஞானப் பிரிவுகளில் கற்கின்றார்கள். அடுத்த படியாக வர்த்தகப் பிரிவுக்கு செல்கின்றனர். எஞ்சிய மாணவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கலைத்துறையில் கற்கின்றனர். தேசியப் பாடசாலைகள், மத்திய மகா வித்தியாலயங்களில் கற்கின்ற அதிகமான மாணவர்கள் உயிரியல், பௌதிக விஞ்ஞானப் பிரிவுகளில் கற்கின்றனர். 1c பாடசாலைகளில் வர்த்தகம், கலை ஆகிய துறைகளில் மட்டுமே கற்பதற்கு வாய்ப்பு இருப்பதனால் க.பொ.த (சா/ த) ல் அதிக பெறுபேறுகள் எடுத்த மாணவர்கள் இத்துறைகளில் கற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால் அதிகமான மாணவர்கள் இப்பாடசாலைகளிலிருந்து கலைத்துறையில் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர்.

கல்முனைக் குரல்: மாணவர்களை ஆளுமைகளாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மட்டிட முடியாததாகும். ஸாஹிராவின் மாணவர்களை வடிவமைப்பதில் ஆசிரியர் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது.

அதிபர்: பொதுவாக ஒரு பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் நான்கு முக்கிய விடயங்கள் இருக்கின்றன.

1. பாடவிதான அபிவிருத்தி

2. இணைப்பாடவிதான அபிவிருத்தி

3. ஒழுக்க மேம்பாடு

4. சூழல் பராமரிப்பு

ஒரு மாணவன் தனது கல்விப் பெறுபேற்றை உயர்த்துகின்றபோது அவன் நினைக்கின்ற தொழிலைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றான். மாணவர்கள் சமமான ஆளுமை உடையவர்களாகத் திகழ்வதற்கு அனைத்து ஆசிரியர்களும் கரிசனையுடன் செயற்படுகின்றனர். குறிப்பாக இணைப்பாடவிதானத்தில் மிகக் கூடுதலான பங்களிப்பை வழங்குகின்றனர். தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றுக்காக மாணவர்களை தயார்படுத்துகின்றனர்.

கல்முனைக் குரல்: கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பெற்றோரின் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது? அவர்கள் எவ்வகையான பங்களிப்பை வழங்க வேண்டும்?

அதிபர்: கற்ற பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துகின்றனர். கல்வியுடன் தொடர்பு குறைந்த பெற்றோர் தங்களின் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவது குறைவாக உள்ளது. இவர்கள் குறிப்பிட்ட மாணவர்கள் மேற்கொள்கின்ற ஏதாவதொரு பிரச்சினை காரணமாக பாடசாiலை அதிபர்  ஆசிரியருடன் முரண்பட்டுக் கொள்கின்றனர். சில பெற்றோர்கள் 06ம் தரத்தில் தனது பிள்ளையை கல்லூரியில் சேர்த்த பின்னர் பாடசாலை விலகல் சான்றிதழை பெறுவதற்காக வருகின்றனர். நாங்கள் நடத்துகின்ற பெற்றோர் கூட்டங்களுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது.

கல்முனைக் குரல்: சமகாலத்தில் ஆண்களின் கற்றல் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கற்றல் நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுகின்றது. இது தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

அதிபர்: ஆண் மாணவர்கள் வெளியுலகுடன் தொடர்புபடுவதால் அதிகமான கவனக் கலைப்பான்களுக்கு உள்ளாகுவதனால் கற்கின்ற வீதம் குறைவாக இருக்கின்றது. ஆண்கள் மாத்திரம் உழைத்து குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு முடியாமல் இருக்கின்றது. இரு பாலாருக்கும் மத்தியில் போட்டி நிலவுகின்றது. சிலர் சீதனப் பிரச்சினையிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக கல்வியில் கூடுதல் கரிசனை செலுத்துகின்றனர். கையடக்க தொலைபேசி, FACEBOOK, Twitter போன்ற சமூக இணையதளங்களில் அதி கூடிய கவனம் செலுத்துகின்றனர்.

கல்முனைக் குரல்: ஸாஹிறாவின் பழைய மாணவர்களின் பங்களிப்பு கல்லூரியின் அபிவிருத்திக்கு எவ்வகையில் உதவுகின்றது?

அதிபர்: எந்தவொரு பாடசாலையிலும் இரண்டு விதமான சமூகங்கள் காணப்படுகின்றது.

1. பாடசாலை சமூகம்: இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள்

2. பாடசாலைக்கு புறம்பான சமூகம்: பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள்

இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பங்களிப்பாற்றுகின்றபோது பாடசாலையில் அதி கூடிய அபிவிருத்தியை அடையச் செய்ய முடியும். ஸாஹிறாவைப் பொறுத்த வரையில் பழைய மாணவர்கள் கூடுதல் பங்காற்றி வருகின்றனர். மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் நடத்துவதிலும், பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதிலும், சூழல் பாதுகாப்புக்கும், பௌதிக வளங்களை பெற்றுத் தருவதிலும் கூட இன்று கூடிய பங்களிப்பு வழங்குகின்றனர்.

கல்முனைக் குரல்: உங்களுடைய காலப்பகுதியில் ஸாஹிறா எவ்வாறான அடைவுகளை அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்?

அதிபர்: பொதுவாக பாடசாலைத் தரத்தை மதிப்பிடுவது பொதுப்பரீட்சையின் அடிப்படையிலாகும். O/L, A/L பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் எங்களுடைய பாடசாலை முழு நாட்டிலும் ஒரு முதல் நிலைப் பாடசாலையாக திகழ்கின்றது. முதல் நிலையை அடைவதற்கு ஆரம்ப வகுப்புகளிலிருந்து மாணவர்களின் கல்வி நடவடிக்கை மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் கனிஷ்ட, இடைநிலை எனும் 06ம் தரத்திலிருந்து 09ம் தரம் வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கை மந்த கதியில் இருக்கின்றது. கடந்த வருடம் வலயக் கல்விப் பணிமனையிலிருந்து இங்கு விஜயம் செய்த கல்வி அதிகாரிகள் குழுவொன்று இந்த மாணவர்களின் அடைவுகளைப் பரிசீலித்தபோது அவை குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்.

கல்முனைக் குரல்: மெதுவாகக் கற்கின்ற மாணவர்களுக்கு பிரத்தியேகமான ஏற்பாடு கல்லூரியில் இருக்கின்றதா?

அதிபர்: இவ்வருடம் க.பொ.த(சா/த) பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களை மூன்று தரமாக பிரித்துள்ளோம். அவையாவன

1. மிகைத்திறன் மாணவர்கள்

2. இடைநிலை மாணவர்கள்

3. பின்தங்கிய மாணவர்கள்

மிகைத்திறன் மாணவர்களுக்கான ஒரு வகுப்பை மிக விரைவில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். கடந்த வருடம் எங்களுக்குக் கிடைத்த பெறுபேறுகளில் 09 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தியைப்பறெ வாய்ப்பிருந்த போதும் தொகுதிப் பாடங்களில் அவர்களால் A சித்தியைப்பெற முடியாது போனது. கடந்த மாதத்திற்கு முந்திய மாதம் O/L கற்கின்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி மூன்று கட்டங்களாக வகுப்புக்களை நடத்துவதாக திட்டமிட்டோம். விசேட தேவையுள்ள மாணர்களுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி ஏ‌னைய மாணவர்களுடன் இணைத்துக்கொள்வதென தீர்மானித்தோம்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

7 Responses to பாடசாலைகள் சமுதாய ஆளுமை உருவாக்கத்திலும் ஒழுக்க விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்த வேண்டும்

 1. Vote -1 Vote +1Riswan
  says:

  அருமையான நேர்காணல் தகவல்கள் கட்சிதமாக பெறப்பட்டுள்ளன..

 2. Zahira yenethu oru kan,yuthe meham kudai pdicka kundu vedippuckalum sell thackuthalhalum kathuhalai cill aatre,manitha iratha vaadaihaluckum Zahira Refugee Campuckullum,Refugeeshalin kanneruckul anaathaihalayum,vithavaihalayum paarthu paarthu yengi yeangi padithu intru sociatyil oralavu neenthi kadanthu vanthullen,yennayum Zahiravil valarchiyil oru ooliyanaha searthuckollungal.

 3. +1 Vote -1 Vote +1RSM
  says:

  கல்முனை சாஹிரா பாடசாலை ஆனது இலங்கையில் உள்ள முஸ்லிம் பிரதான படசளைகளிக் ஒன்று என்பது உண்மை. முஸ்லிம் பாடசாலைகளுக்கு மத்தியில் அது ஒப்பீட்டு அளவில் மிக சிறந்து விளங்குஹின்றது . ஆனாலும் மாற்று மொழி பாடசாலைகளுடன் ஒப்பிடும் பொது எமது சாஹிரா பாடசாலையின் பெறுபேறுகள் மிகவும் குறைவு என்பதே எனது கருத்து.
  உதாரணமாக ஒவ்வொரு வருடமும் 10 இற்கு அண்மையான மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப் படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இவர்களில் 9௦% ஆனவர்கள் மாவட்ட கோட்டாவின் மூலம் தெரிவு செய்யப்படுகிறவர்கள். இதன் மூலம் அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாத்திரமே எமது மாணவர்கள் செல்கிறார்கள். இவ்விடங்கள் சாஹிர மூலம் நிரப்படவிட்டால் இன்னும் ஒரு முஸ்லிம் பாடசலெய் நிரப்பும். ஏனென்றால் அம்பாரெய் மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளே. ஆகவே இந்நோக்கத்தில் எமது பாடசாலையால் முஸ்லிம்களுக்கு ஒரு சேவை என கூறமுடியாது.

 4. Vote -1 Vote +1RSM
  says:

  மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட மேலதிகமாந இடங்களை பெற மாணவர்கள் உயர் பெறுபேறுகளை பெறவேண்டும். அதாவது பல்கலைகழக தெரிவில் 4௦% ஆனா இடங்கள் அகில இலங்கை ரீதியாக உயர் பெறுபேறுகளை பெரும் மாணவர்களுக்கே ஒதுக்கப்படுகிறது. இது மெரிட் பாஸ் என்று azaikkapadum. இவர்கள் மாவட்ட கோட்டவுக்குள் கணக்கிடப்பட மாட்டார்கள். இவர்கள் மாவட்ட கோட்டாவுக்கு மேலதிகமாக அனுமதி perupavarkal .ஆனால் முஸ்லிம் மானவர்கள் மெரிட் பாஸ் இற்குள் வருவது மிக மிக குறைவு.
  நான் கூற வருவது என்னவென்றால் சாஹிராவின் நோக்கமாக இருக்க வேண்டும் இந்த மெரிட் பாஸ் இற்குள் வரும் மாணவர்களின் என்னிட்கையை அதிகரிப்பதே. இதன் மூலம் இன்னும் பல முஸ்லிம் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.

 5. Vote -1 Vote +1Subitheen
  says:

  I am sorry to note that kalmunai zahira college not yet see a competent and capable principal and staff.

 6. Vote -1 Vote +1Subitheen
  says:

  remove this interview immediately as this principal is not a fit and proper person to be the principal of zahira college

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>