டோனியின் சென்ட் நிறுவனம் அடுத்த மாதம் தொடங்கப்படும்.

Dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சர்வதேச அளவில் புதிய தொழிலில் குதிக்கிறார். உடலில் நீண்ட நேரம் நறுமணத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் ஆண்களுக்கான வாசனை திரவியம் (சென்ட்) விற்பனையை, துபாய் நிறுவனத்துடன் இணைந்து தொடங்குகிறார். முதலில் இந்தியா அதன் பிறகு அரபு நாடுகள், பிறகு உலகின் மற்ற இடங்களுக்கும் அவரது நிறுவனம் தொடங்கப்படும்.
அடுத்த மாதம் இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, டோனி நிறுவனத்தின் சென்ட்டுகள் இந்திய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்து விடும். இதன் மூலம் சர்வதேச அளவில் இது போன்ற விற்பனையில் குதிக்கும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை டோனி பெறுகிறார். டென்னிஸ் பிரபலங்கள் ரோஜர் பெடரர், மரிய ஷரபோவா ஆகியோர் ஏற்கனவே இது போன்று ‘சென்ட்’ விற்பனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>