முதலாவது எஸ்.எல்.பில் கிண்ணம் ஊவா அணிக்கு

Cricket - Sri Lanka Premier League M4 Uva Next Vs Basnahira Dundee

ஐசிசியுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன் முதலில் ஏற்பாடு செய்திருந்த ஐபிஎல் தொடரை ஒத்த மஹேந்திரா சிறிலங்கா பிரிமியர் லீக் தொடரின் முதல் கிண்ணத்தை ஊவா நெக்ஸ்ட் அணி சுவீகரித்தது.

மழைக்கடவுளின் உதவியுடன் டக்வத் லூயிஸ் முறைப்படி நெகனஹிர நாகாஸ் அணியை 19 ஓட்டங்களால் ஊவா நெக்ஸ்ட் அணி வெற்றிகொண்டு கிண்ணத்தை கைப்பற்றியது.

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (31) இரவு கொழும்பு ஆர்.பிரேமசதாச மைதானத்தில் நடைபெற்றது.

ஊவா நெக்ஸ்ட் மற்றும் நெகனஹிர நாகாஸ் அணிகள் மோதிய இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நெகனஹிர நாகாஸ் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நாகாஸ் அணி மழையின் குறுக்கீட்டால் 15 ஓவர்கள் மாத்திரம் விளையாடி 4 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் மெத்தியூஸ் 27 பந்துகளில் 4 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் விலாசி ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை பெற்றார்.

15 ஓவர்களுக்கு 137 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஊவா அணி துடுப்பெடுத்தாடிய வேளை, மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன்போது ஊவா அணி 5.1 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 63 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மழை இடைவிடாது தொடர்ச்சியாக பெய்ததால் டக்வத் லூயிஸ் முறைப்படி ஊவா நெக்ஸ்ட் அணி வெற்றிபெற்றது.

ஊவா அணி சார்பில் டில்சான் முனவீர 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் விலாசி ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் ஆட்டநாயகனாக டில்சான் முனவீர தெரிவு செய்யப்பட, தொடராட்ட நாயகனாக சமிந்த எரங்க தெரிவு செய்யப்பட்டார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>