கல்முனையில் அமானா தகாபுல் நிறுவனத்தின்‌ புதிய காப்புறுதிக் கிளை திறப்பு

2212

-எம்.ஐ.சம்சுதீன்-

கல்முனை அமானா தகாபுல் நிறுவனத்தின் காப்புறுதிக் கிளையின் புதிய அலுவலகம் கல்முனை மல்லிகா கட்டிடத் தொகுதியில்  (அமானா வங்கிக்கு அருகில்) அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த நிறுவனமானது இஸ்லாமிய சரீஆ கோட்பாட்டின் அடிப்படையில் காப்புறுதிகளை மேற்கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது புதிதாக காப்புறுதி செய்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டது.

பிரதம அதிதியாக அமானா தகாபுல் நிறுவனத்தின் பணிப்பாளர் பசால் கபூர் கலந்துகொண்டு கிளையினை திறந்துவைத்த இந்நிகழ்வின்போது உலமாக்கள், பிரதேச வாழ் பெண்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலர் காப்புறுதி பதிவுகளை மேற்கொண்டனர்.

 

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

2 Responses to கல்முனையில் அமானா தகாபுல் நிறுவனத்தின்‌ புதிய காப்புறுதிக் கிளை திறப்பு

 1. Vote -1 Vote +1firthous ahamed
  says:

  nalla sevai

 2. Vote -1 Vote +1Kaneem MA
  says:

  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  “மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும்”
  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

  “மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர்”.
  (அபூஹுரைரா (ரழி) புகாரி)

  “வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை”.
  (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம் )

  நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
  இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக!
  (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>