கல்முனையில் இஸ்லாமிய அடிப்படையில் ‘ஹிமாயா பீச் றிசோட்’ எனும் புதிய ஹோட்டல் உதயம்!

kalmunai

(எஸ்.அஷ்ரப்கான்-மாநகர செய்தியாளர்)

கல்முனை வாடிவீட்டு வீதியில் முழு இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த ‘ஹிமாயா பீச் றிசோட்’ எனும் பெயரிலான முதலாவது ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள புதிய உறுப்பினரும் கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லுரி நிர்வாக சபைத் தலைவருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்.

அத்துடன் இந்நிகழ்வில் விசேட அதிதியாக கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் உட்பட ஊர்ப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனைப் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த குறையான இந்த ஹோட்டல் முற்றிலும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த உணவு வகைகள், இஸ்லாமிய சூழலுக்கு அமைவாக தங்குமிடம், அனாச்சாரங்கள் அற்ற விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை நடாத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

இந்த நிகழ்வுக்காண அழைப்பிதழில் போதைவஸ்து, மதுபாவனைகள் முற்றாக தடை செய்யப்பட்ட இடமாக இதனைக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்முனை ஹிமாயா ட்ரவல்ஸ் உரிமையாளர் அல்-ஹாஜ் மௌலவி எம். நபார் அவர்களின் மற்றுமொரு சேவையே இந்த புதிய உதயமாகும்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to கல்முனையில் இஸ்லாமிய அடிப்படையில் ‘ஹிமாயா பீச் றிசோட்’ எனும் புதிய ஹோட்டல் உதயம்!

  1. Vote -1 Vote +1Khaleel rahman
    says:

    Alhamthulillah. Very Good. Moulavi Nafar fulfilled a very necessary needs for Kalmunai Municipal are’s mass willings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>