வரவு செலவுத்திட்டம் தயார் : அமைச்சரவையும் அங்கீகரித்து விட்டது

heahaliye about lectures strike

2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மசோதாவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2013 இல் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 2520 பில்லியன் ரூபா எனவும் மொத்த வருமானம் 1280 பில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப் பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை மொத்த தேசிய உற்பத்தி வீதத்தில் இருந்து மேலும் குறைந்தளவாக வைத்திருக்கும் நோக்கத்துடன் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

2013 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான முதலாவது வாசிப்பு ஒக்டோபர் 9ம் திகதி இடம்பெறுவதோடு வரவு செலவுத் திட்ட பிரேரணை நவம்பர் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிதி திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2013 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். இதன்படி வர்த்தமானியில் பிரசுரித்த பின் அதனை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

ஜனாதிபதியும் திரைசேரியும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் தரப்பினருடன் தனித்தனியாக கலந்தாலோசித்து இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர செலவீன கட்டமைப்பிற்குள் 2013 – 2015 வருடங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2013 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாகவும் பணவீக்கம் 7 வீதமாகவும் நிலை நிறுத்தப்படும். அரசாங்கத்தின் மொத்த வருமானம் 20 பில்லியன் ரூபா வெளிநாட்டு உதவிகள் அடங்கலாக 1280 பில்லியன் ரூபாவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to வரவு செலவுத்திட்டம் தயார் : அமைச்சரவையும் அங்கீகரித்து விட்டது

  1. Vote -1 Vote +1Charline
    says:

    Only wanna comment that you have a very nice site, I enjoy the pattern it really stands out.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>