உச்சத்தை தொடும் நாட்டின் உயர்கல்வி பிரச்சினை : தயாராகும் வரவு செலவுத்திட்டம்

FUTA Rally

இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளா்களின் பிரச்சினைகளை தீா்த்து வைக்குமாறு இன்று நாட்டின் பல தரப்பினரிடமிருந்து அழுத்தங்கள் வந்த வண்ணமே உள்ளன ஆனால் அரசாங்கமும் அவா்கள் கேற்பதையெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது .

இப்போராட்டங்களுக்கு பலா் பல காரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது மாணவா்களே இது அரசியல் நோக்கமானது என்று அரசும் நாட்டின் கல்வித்தரத்தை கூட்டுவதற்கே என்று விரிவுரையாளா்களும் சொல்லிக்கோண்டு களத்தில் விளையாடிக்கொண்டு நிற்கின்றனா்.

இப்போதுதான் ஆட்டம் சுவாரஷ்யமான கட்டத்தை நெருங்கியுள்ளது அதுதான் நாட்டின் வரவு செலவுத்திட்டம் . பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மிகப் பாரிய நிதி ஒதுக்கீடு செய்துள்ள அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியில் முதுகெழும்பாய் இருக்கும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்போகும் நிதி போதுமானதாக இருக்குமா? விரிவுரையாளா்களின் கேரிக்கையை திருப்திப்படுத்துமா? திருப்திப்படுத்தாவிட்டால் போராட்டம் தொடருமா?

நாட்டில் சமாதானம் மலா்ந்து நாட்டு மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்கின்றனா் என்று சொல்லும் அரசாங்கம் எதற்கு பாதுகாப்பிற்கு அதிக பணத்தை செலவிட வேண்டும் அதில்தான் அதிக கொள்ளை அடிக்க முடியும் கல்வியில் அவ்வாறு செய்ய முடியாது என்பதற்காகவா? என்ற கேள்வியும் வராமல் இல்லை

இப்பிரச்சினை குறித்து ஊழல் மோசடிகள் செய்யக் கூடிய துறைக்கே அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்வித்துறையில் மோசடி செய்ய முடியாத காரணத்தினால் அரசாங்கம் அதிக பணத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதில்லை. எமது நாட்டின் கல்வித்திட்டம் பிரமிட் கட்டமைப்பை ஒத்தது. ஆரம்பத்தில் பலர் இதில் இணைந்து கொள்வார்கள். எனினும், இறுதியில் ஒரு சிலர் மட்டமே எஞ்சுகின்றனர்.

பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதே பெற்றோரின் இலக்காகக் காணப்படுகின்றது. உலகின் வறிய நாடுகள் கூட அதிகளவான பணத்தை கல்வித்துறைக்காக ஒதுக்குகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை உயர் கல்வியமைச்சுக்கும் பல்கலைக்க விரிவுரையாளர்களுக்கும் இடையிலான முறுகல் நிலைமையை தீர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மல்வத்தை மற்றும் அஸ்கிரியபீடங்களின் வண. மகாநாயக்க தேரர்கள் உயர் கல்வி அமைச்சுக்கான தமது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளனர்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்திகளான மாணவர்கள் இக்கட்டனான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகக் கவலையடைகின்றோம்.  பிரச்சினை தொடங்கி 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்க உயர் கல்வியமைச்சு தவறியுள்ளமை நம்பிக்கை இழப்புக்கு இட்டுச்சென்றுள்ளதெனவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அரசு தரப்பில்

அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க விரிவுரையாளர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது அவர்கள் கோருவதைப் போல சம்பள உயர்வு வழங்கப்பட்டால் நாட்டில் அதிகமாக சம்பளம் பெறுபவர்கள் பல்கலைக்கழக போராசிரியர்களாக மட்டும் தான் இருக்க முடியும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்தார்

எமது நாட்டில் உயர் நீதி மன்ற நீதிபதிகள்தான் அதிக சம்பளம் பெறுகின்றனர் ஆனால் தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அதை விட அதிகமாக கேட்கின்றனர்.

ஏனைய அரச ஊழியர்களை விட விரிவுரையாளர்களுக்கு அதிகமான சலுகைக்கள் கிடைக்கப் பெறுவதாகவும் அந்த வகையில் பல்கலைக்கழக விடுமுறை என்றால் அவர்களுக்கும் விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை போன்ற பல்வேறு வசதிகளை பெற்று வருவதாக தெரிவித்தார்.

அத்துடன் குடும்பத்துடன் வெளிநாடு செல்வதற்கான வசதிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மேலதிக விரிவுரைக்கான கொடுப்பனவுகள் என்பன வழங்கப்படுகின்றன. எனவே இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது விரிவுரையாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 அமைச்சர் மைத்ரிபால சிறிசேன லிபியா, எகிப்து, சிரியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கையையும் மாற்றுவதற்காக ஏகாதிபத்திய சுதேச விரோத கட்சிகள் மற்றும் குழுக்கள் கூட்டாக இணைந்து தேசத்துரோக நோக்கங்களுக்காக செயற்பட்டு வருவதாக அமைச்சர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுக்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தை தங்களின் கை பொம்மைகளாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் மிகுந்த கௌரவத்திற்கு இலக்கான இலவச கல்வி, சுகாதாரம் என்பவற்றிற்கான அரச அனுசரணையை சமூக நலன்புரி மூலதர்மங்களின் அடிப்படையில் செயற்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரியளவில் வழங்கி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>