முதலமைச்சர் பதவியை பங்குபோட இணக்கப்பாடு போதும் அரசியலமைப்பில் இடம் தேவையில்லை: கெஹலிய

heahaliye about lectures strike

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் தலா இரண்டரை வருடங்களுக்கு பங்குபோட்டுக்கொள்ள அரசியலமைப்பில் இடமில்லாதபோதும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இது சாத்தியமே என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஐந்து வருடகால முதலமைச்சர் பதவியை பாதி காலத்துக்கு இருவர் பகிர்ந்து கொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. ஆனால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஒருவரை இடையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு சட்டத்தில் இடமுண்டு.

எனினும் இரு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் அதன் மூலம் முதலமைச்சர் பதவியை இருவர் பகிர்ந்துகொள்ளலாம். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to முதலமைச்சர் பதவியை பங்குபோட இணக்கப்பாடு போதும் அரசியலமைப்பில் இடம் தேவையில்லை: கெஹலிய

  1. Vote -1 Vote +1mohamed
    says:

    ithu nadanthal nallam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>