இறுதிச்சுற்றுக்குள் நுழைவது யார்? இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை

sl-pak

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

பாகிஸ்தான் அணி 2009ஆம் ஆண்டு உலக டுவென்டி டுவென்டி தொடரில் சம்பியன்களான அதேவேளை, அத்தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராகப் பங்குபற்றித் தோல்வியடைந்திருந்தது.

இலங்கை அணி குழுநிலைப் போட்டிகளில் ஒரு வெற்றியும், ஒரு தோல்வியையும் பெற்றுக் கொண்ட அதேவேளை, சுப்பர் 8 சுற்றில் தான் பங்குபற்றிய 3 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளையே இலங்கை அணி வெற்றிகொண்டிருந்தது.

பாகிஸ்தான் அணி குழுநிலைப் போட்டிகளில் இரண்டிலும் வெற்றியைப் பெற்றுக் கொண்ட அதேவேளை, சுப்பர் 8 சுற்றில் இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து கொண்டது.

அவுஸ்திரேலிய,தென்னாபிரிக்க அணிகளை வெற்றிகொண்டிருந்த பாகிஸ்தான் அணி,இந்திய அணிக்கெதிராக தோல்வியடைந்திருந்தது.

இரு அணிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையில் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாகக் காணப்படும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இப்போட்டி இடம்பெறுகின்றமை அதிகமான எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அவ்வணியில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனக் கருதப்படுகிறது. எனவே அவுஸ்திரேலிய அணிக்கெதிராகப் போட்டியில் பங்குபற்றிய அணியே இன்றைய போட்டியிலும் பங்குபற்றவுள்ளது.

இலங்கை அணி சார்பாகவும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புக்கள் இல்லை என்றே இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றுவரும் அணியை மாற்றுவது சிறப்பாக அமையாது என்பதாலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:
இலங்கை: திலகரட்ண டில்ஷான், மஹேல ஜெயவர்தன குமார் சங்கக்கார, லஹிரு திரிமன்ன ஜீவன் மென்டிஸ், அன்ஜலோ மத்தியூஸ், திஸர பெரேரா, நுவான் குலசேகர, லசித் மலிங்க, அஜந்த மென்டிஸ், அகில தனஞ்சய.

பாகிஸ்தான்:  மொஹமட் ஹபீஸ், இம்ரான் நசீர், நசீம் ஜம்ஷெத், கம்ரன் அக்மல், உமர் அக்மல், சொய்ப் மலிக், ஷகிட் அப்ரிடி, அப்துல் ரஷாக், உமர் குல், சயீட் அஜ்மல், ராஷா ஹசன்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>