பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது இலங்கை

Mahela+Jayawardene+Sri+Lanka+v+New+Zealand+QFIj5mx8Uetl

 இருபதுக்கு இருபது உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மஹேலவை தவிர வேறு எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 42, திலகரத்ன தில்ஷான் 35, குமார் சங்கக்கார 18, ஜீவன் மென்டிஸ் 15, திஸர பெரேரா 11, ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 10 என ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அஜ்மால், அப்ரிதி, ஹபீஸ், உமர் குல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 140 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதன்படி இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் மொஹமட் ஹபீஸ் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ரங்கண ஹேரத் 3 விக்கெட்களையும் மெத்திவ்ஸ் மற்றும் மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழத்தினர்.

இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இலங்கை அணியுடன் மோதும் மற்றைய அணி அவுஸ்திரேலியாவா அல்லது மேற்கிந்திய தீவுகளா என நாளை தெரியவரும். இன்றைய போட்டியின் நாயகனாக மஹேல ஜயவர்த்தன தெரிவானார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>