பணி பகிஷ்கரிப்பிலிருந்து விலகிக்கொள்ள பல்கலைக்கழக விரிவுரையாளா்கள் சங்கம் தயார்

open

அரசாங்கம், சங்கத்துடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாயின் தற்போது நடைபெறும் வேலை நிறுத்தத்தை மூன்று நாட்களில் விலக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. ஐனாதிபதி நேரடியாக தலையிட்டால் பணி பகிஷ்கரிப்பிலிருந்து விலகிக்கொள்ள தயார் என நேற்று முன்தினம் இவர்கள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருப்பினும் அவ்வாறு நடக்கவில்லையென மேற்படி சம்மேளனத்தின் தலைவர் தேவசிறி கூறினார். அதேவேளை  அமைச்சர்களின் தீர்மானத்திற் கமைய இன்றைய தினம் இப்பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக உயர் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் நவரத்ன தெரிவித்தார்.

இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவ பல பழைய மாணவர் சங்கங்களும் வர்த்தகப் பிரமுகர்களும் முன்வந்துள்ளனர். மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்தும் சிறந்த ஆலோசனைகளை வழங்கியும் கணிசமான பங்களிப்பை செய்துள்ளனர். பிரச்சினை தீர்த்துவைக்கப்பட வேண்டும் என அக்கறை கொண்டவர்களால் வழங்கப்படும் உதவிகள் நல்ல சகுனமாகும் என தேவசிறி மேலும் குறிப்பிட்டார்.

இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த் தைக்கு முன்னோடியாக நேற்றும் உள்ளக மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவிக்கையில்;

ஏற்கனவே பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதும் இன்றைய பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சுமுகமான பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் விரிவுரையாளர் சம்மேளனமும் இணைந்து மேற்கொள்ளப்படும் இப்பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் விரிவுரையாளர்களின் பிரச்சினையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் உணரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு சமமான தரத்தில் உள்நாட்டு பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்வதற்காக 1978ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எமது பல்கலைக்கழகங்களைப் பற்றியும் கல்விச் சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்தின் வகிபாகம் பற்றியும் பாதகமான அறிக்கைகள் அண்மையில் வந்துள்ள போதிலும் கல்வி முறைமையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான தொலைநோக்கு அரசாங்கத்துக்கு உள்ளது. உள்ளூராட்சிமன்றங்கள், மீன்பிடி அமைச்சு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, சுகாதார அமைச்சு என்பவையும் கல்வி மீது செலவு செய்வதனால் இலங்கையில் கல்விக்கான ஒதுக்கீடு ஐந்து சதவீதத்திலும் கூடுதலானது என கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>