ரி-20 போட்டி முடிவின் பின்னர் ரசிகர்கள் குழப்பத்தினை ஏற்படுத்தக் கூடாது; பொலிஸார் வேண்டுகோள்

uhuy8

ரி-20 போட்டிகள் முடிவுற்றதன் பின்னர் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையிலோ அல்லது வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் வகையிலோ எவரும் செயற்படக் கூடாது என பொலிஸார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கட் பேரவை ருவன்ரி-20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம்  கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இருப்பினும் போட்டி முடிவில் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையிலோ அல்லது வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் வகையிலோ எவரும் செயற்படக் கூடாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

போட்டி நடைபெறும் காலப் பகுதியில் அல்லது அதன் பின்னர் சாரதிகள், போக்குவரத்துக்கு இடைஞ்சலான வகையில் வாகனங்களைச் செலுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போட்டி நடைபெறும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் விசேட நுழைவு அனுமதிப்பத்திரம் உடைய வாகனங்கள் மட்டுமே மைதானத்திற்கு அருகாமையில் தரிக்க முடியும்.

அத்துடன் மைதானத்திற்குள் பிரவேசிக்கும் ரசிகர்கள் அனைவரும் மிக கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் ரசிகர்கள், கண்ணாடியிலான போத்தல்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>