நற்பிட்டிமுனை பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

123

(ஏ.ஆர்.பைறூஸ்கான்)

நற்பிட்டிமுனை பிரின்ஸ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞபகார்த்த விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் முஹமட் றியாஸ் தலைமையில் நடைபெற்றது.

ஒலிம்பிக் தீபமேற்றி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் 25மீற்றர் ஓட்டம், முயல் ஓட்டம், தவளை ஓட்டம், தாறா ஓட்டம்,சமநிலை ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், கரண்டியில் தேசிக்காய் ஏந்திய ஓட்டம், வினோத உடைப் போட்டி போன்ற பல்வேறுபட்ட போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நசீர், முன்னாள் மாநகர சபை உறுப்பினரும்,முஸ்லிம் காங்கிரசின் உச்சபீட உறுப்பினருமான யூ.எல்.தௌபீக் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார்,அதிபர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பிரேதேசவாசிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>