கல்முனை ஸாஹிராவில் தலைமைத்துவ பயிற்சி முகாம்

zck-leader

கண்ணியமிக்க சமுதாயத்தை அடையாளப்படுத்துவதற்கான அமையத்தினால் (AIMS) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் 2012.11.01 ம் திகதி, கல்முனை ஸாஹிராவில் வெற்றிகரமாக நடைபெற்றது.

“உயிர்த்துடிப்புள்ள மாணவத் தலைமை” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த முகாமில் 46 மாணவத் தலைவர்கள் பங்குபற்றினர். காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இப்பயிற்சி முகாம் சான்றிதழ் வழங்கும் வைபவத்துடன் மாலை 8.30 மணிக்கு நிறைவுபெற்றது.

கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இப்பயிற்சி முகாம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் உதவி அதிபர் எம்.எஸ்.மொஹம்மட், ஒழுக்காற்றுச் சபையின் உதவித் தலைவர் யு.எல்.எம்.இப்றாஹிம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இம்முகாமின் வள ஆளணிகளாக கலந்துகொண்ட இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அப்துல் வஹாப் (இஸ்லாஹி), ‘‘SERO Sri Lanka‘’ நிறுவனத்தின் தலைவர் றினோஸ் ஹனிபா, தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர் எம்.எம்.காமில், கண்ணியமிக்க சமுதாயத்தை அடையாளப்படுத்துவதற்கான அமையத்தின் உப தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுமாகிய எம்.என்.எம்.தில்ஷான் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவத் தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ரிஷாட் ஷெரீப் உட்பட ஏனைய அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>