நாட்டிற்கு புகழ்சேர்த்த சாய்ந்தமருது உதைபந்தாட்ட நடுவர் அலியார் பைசர்

FAIZER

(MP)

சாய்ந்தமருதைச் சேர்ந்த விளையாட்டு ஆசிரியர் அலியார் பைசர் ஆசிய பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த வாரம் ஈரானில் நடாத்தப்பட்ட 40 வது ஆசிய உதைபந்தாட்ட போட்டிக்கு இலங்கை சார்பாக மத்தியஸ்தராக தெரிவு செய்யப்பட்டு ஈரானுக்கு சென்று வந்ததன் மூலம நாட்டுக்கும் கல்முனைப் பிரதேசத்திற்கும் புகழ் சேர்த்தார்.

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் விளையாட்டு ஆசிரியரான இவர் இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பிரதம மத்தியஸ்தராக கடமையாற்றி சிறந்த மத்தியஸ்தராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான அலியார் பைசர் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மாவட்ட இணைப்பதிகாரியும் தற்போது சர்வதேச மத்தியஸ்தர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.

இச்சுற்றுப் போட்டியில் இலங்கை ஈரான் தாய்லாந்து, கொரியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா,இந்தோனேஷியா, புரூணை, கொங்கொங் ஆகிய பத்து நாடுகள் பங்குபற்றின.

இதில் இறுதிப் போட்டிக்கு ஈரான், தாய்லாந்து ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டியில் இரண்டுக்குப் பூச்சியம் (2-0) என்ற கோல்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தைத் தோற்கடித்து ஈரான் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>