சாய்ந்தமருது வர்த்தகர் சங்க தலைவர் குயின்ஸ் கலீல் காலமானார்!

janaza

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்க தலைவர் குயின்ஸ் கலீல் ஹாஜியார் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார்.
இவரது ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இவரது மறைவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காஸிம், கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், ரி.ரி.லங்கா நிறுவனத் தவிசாளர் எம்.எம்.ஜஹான், ஆசிய மன்ற நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், தேசிய முஸ்லிம் கவுன்சில் செயலாளர் நாயகம் செயிட் ஏ.எஸ்.மௌலானா, கல்முனை மயோன் நிறுவன முகாமையாளர் ஏ.எல்.எம்.நியாஸ், கல்முனை தொகுதி ஐ.தே.க. பிரசார செயலாளர் அஸ்வான் சககாப் மௌலானா ஆகியோர் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம், சாய்ந்தமருது சமூக அபிவிருத்தி ஒன்றியம் ஆகியனவும் குயின்ஸ் கலீல் ஹாஜியாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளன.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>