முஸ்லிம் சமூக நிறுவனங்களின் முகாமைத்துவம் – அஷ்கர் கான்

ashkerkhan0

நேர்காணல்: இன்ஸாப் ஸலாஹுதீன்

அஷ்கர் கான் அவர்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. படிப்பை நிறைவு செய்துள்ள இவர் முகாமைத்துவ ஆலோசனை, சந்தைப்படுத்தல் மற்றும் மனித வள அபிவிருத்தியில் தேர்ச்சி மிக்கவர். முகாமைத்துவ,சந்தைப்படுத்தல் ஆலோசகராக இருக்கும் இவர்,ஊடகத்துறை, ஆவணப்படத் தயாரிப்பிலும் அக்கறை கொண்டவர். சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஷ்கர் கான் அவர்கள் (Caring Hands, Knowledge Box) ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் INSIGHT கல்வி நிறுவனத்தின் இயக்குனர் சபை உறுப்பினராகவும் முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: முஸ்லிம் சமூக நிறுவனங்களின் முகாமைத்துவம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

பதில்: சமூக நிறுவனங்கள் ஒப்பீட்டு அளவில் முன்பை விட இப்பொழுது தேர்ச்சி பெற்று வருகின்றன அவர்களது  எல்லா விடயங்களிலும் அந்த மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. ஒரு முடிவை அடையாளப்படுத்தி விளைவை நோக்கி பயணிக்கும் முறையின் மூலமே வெற்றியை துரிதப்படுத்திக் கொள்ள முடியும்.

சமூக நிறுவனங்கள், தஃவா அமைப்புக்கள், சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கை முன்பை விட தற்போது சமூகத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகப் பிரச்சினைகள் குறைந்துள்ளதா அதற்குரிய தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் இல்லை என்ற ஒற்றைப் பதிலே எமக்கு கிடைக்கின்றது.

இதற்கு என்ன காரணம் என்றால், அடைவை நோக்கிய அணுகு முறை பின்பற்றப்படாமைதான். இது முகாமைத்துவத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும். ஒரு வியாபார நிறுவனம் தன்னுடைய வெற்றியை இலாபாத்தை வைத்து இலகுவாக தீர்மானித்துக் கொள்ளும். ஆனால், சமூக நிறுவனங்கள் தமது வேலைத்திட்டத்தின் விளைவை வைத்துத்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும்.

எனவே, விளைவை மையப்படுத்திய வேலைத்திட்டமாக தமது பணிகளை சமூக நிறுவனங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, கடந்த ரமழானிலே செய்யப்பட்ட இப்தார் நிகழ்ச்சிகள் எந்தளவு தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தியது என்பதை நாம் சிந்தித்தாக வேண்டும்.

ஊர் மட்டங்களில் அது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும், தலை நகரத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான இப்தார் நிகழ்வுகள் எம்மை ஒரு ஆடம்பர சமூகம் எனவும் அதிகம் பணம் உள்ளவர்களெனவும் அடையாளப்படுத்தி இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

சமூக நிறுவனங்களில் இருக்கின்ற மற்றொரு விடயம்தான் எப்போதும் அவை நல்லவர்களையே தேடுகின்றன. ஒரு நிறுவனத்தின் போக்கு நல்லவர்களாலும், வல்லவர்களாலும்தான் தீர்மானிக்கப்படுகின்றது. எல்லா அமைப்புக்களும் தமது சிந்தனையோடு ஒத்துப்போகக் கூடிய நல்லவர்களிடமே பொறுப்புக்களை கொடுக்கின்றன. ஆனால், அடைவு மட்டம் பாதிக்கப்படும்போதுஅது அப்படித்தான் என தம்மை தேற்றிக் கொள்கிறார்கள்.

எனவே, நல்லவர்கள் தரமானவர்களாகவும் இருக்கின்றார்களா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சமூக நிறுவனங்கள் தனி நபர்களின் ஆளுமை ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது. அது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. மேலும், தலைமைத்து வத்திற்கு அடுத்த பரம்பரையையும் உருவாக்குவதில் அதிகம் முனைப்புக் காட்ட வேண்டும்.

 (நன்றி: மீள்பார்வை)

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>