சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.பளுலுள்ளாஹ் காலமானார்!

777

(ஜிப்ரான், பைசல் ஜிப்ரி)

காத்தான்குடி-5, ஊர் வீதி, அப்துல் மஜீத் ஆலிம் ஒழுங்கையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி கிளை முகாமையாளருமான அஹமட் லெவ்வை பளுலுல்லாஹ் நேற்று நள்ளிரவு 11.30 மணியலவில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஊடகத் துறையில் மிக நீண்டகாலம் சேவையாற்றிய இவர், முஸ்லிம் சமூக நலனுக்காக அரும்பாடுபட்டவர்.

இவர் தனது புதல்வர்களுள் ஒருவரான பர்ஹான் என்பவரை சிறு வயதில் இருந்தே ஊடகத்துறையில் ஈடுபடுத்தி அவரும் இன்று மட்டு மாவட்டத்தில் ஓர் முன்னணி ஊடகவியலாளராக சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.

இவர் பாத்திமா பௌசியா(நகரசபை-காத்தான்குடி)வின் கணவரும், முகம்மது பர்தான் (கட்டார்), அல்-ஹாபிழ் பாஸி பஹ்ஜான்(அப்பாஸியா அரபுக் கல்லூரி-காலி), பாஸுல் பர்ஹான் (ஊடகவியலாளர்), பாத்திமா றஸ்ஹானா(முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரி- கல்லெலியா), பஸ்லுல் ரஹ்மான், பாத்திமா பதீனா ஆகியோரின் தந்தையும், தொழல்நுட்ப உத்தியோகத்தர்; றூஹுல்லா, ஏ.எல். இஸ்ஹாக்(கட்டார்), ஏ.எல். மன்சூர் ஆகியோரின் சகோதரருமாவார்.

இவரின் ஜனாசா இன்று மாலை காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  தொழுகையிலும் நல்லடக்கத்திலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.பளுலுள்ளாஹ்வின் மறைவு குறித்து VOK NEWS ஊடக வலயமைப்பு  ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன். அவரின் மறுமை வாழ்வுக்காகவும் இறைவனிடம் பிராத்திக்கிறது.அவரின் மறைவு குறித்து அவரின் குடும்பத்திற்கும் அவரின் பிரிவால் துயர் அடையும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது .

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>