முதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்

gold_silver_bars

நடப்பாண்டில் தங்கத்தை விட, வெள்ளியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். சர்வதேச அளவில் தொழில்துறை போக்கு அடிப்படையில் நடப்பாண்டில் தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்வதைதான் பெரும்பாலானவர்கள் விரும்பி வந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டில் அந்த நிலை பெரிதும் மாறியது. ஏனெனில், வெள்ளியின் விலை, தங்கத்தை காட்டிலும் மிக அதிகமாக உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை பெற்று தந்தது. 2012ல் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு (10 கிராம்) 13.04 சதவீதம் லாபம் கிடைத்தது. இந்த ஆண்டில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 11.8 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு (ஒரு கிலோ) கடந்த ஆண்டில் 13.46 சதவீதம் லாபம் கிடைத்தது. இந்த ஆண்டில் அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 34.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி மீதான முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைப்பதற்கு முக்கிய காரணம், அதன் பயன்பாடு அதிகரித்து வருவதுதான். செல்போன், போட்டோகிராபி, எலக்ட்ரிக்கல் சாதனங்கள், நகைகள் உள்ளிட்டவற்றிலும், ஆபரணங்களிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெள்ளியின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Profitable to invest

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>