மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தொடர்ந்தும் அதிபர் நியமன இழுபறி

mlck

சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி தகைமைமிக்க ஒருவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு பாடசாலைச் சமூகம் தடையாக இருப்பது அப்பாடசாலையின் கல்வி நிலையை வீழ்ச்சியடையச் செய்யும் என்று இலங்கை இஸ்லாமிய சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் முகம்மட் அனஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“கல்முனைப் பிரதேசத்தின் பிரபல பாடசாலையான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபர் ஒருவரை நியமிப்பிதல் பலகாலமாக இழுபறி நிலை காணப்படுகிறது.

இந்த அதிபர் நியமனப் பிரச்சினையானது நீதிமன்றம் வரை சென்று நீதிமன்றின் தீர்ப்பையடுத்து, அதிபர் நியமத்துக்கான விண்ணபங்கள் கோரப்பட்டு, நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு, அதிபர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் அதிபராக நியமிக்கப்பட்டவர் கடமையைப் பொறுப்பேற்பதில் ஏற்பட்ட அசாதாரண நிலையையடுத்து சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபராக 10 வருடங்கள் கடமை புரிந்த எச்.எம்.பாறூக், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் கடமையேற்க சென்றபோது அதற்கு அனுமதிக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இது கவலைக்குரிய விடயமாகும்.

இந்நிலையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அண்மைக் காலமாக கல்வியில் பின்தங்கிய நிலையில் செல்வதாக பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் குறிப்பிடுகின்றனர்.

பெற்றோர்களினதும் நலன் விரும்பிகளினதும் முறைப்பாடுகள், கோரிக்கைகளையடுத்து இப்பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்கும் பாடசாலையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் தகைமையும் அனுபமும் உள்ள ஒருவர் இப்பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட வேண்டுமென ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தன.

ஆசிரியர் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தங்களின் காரணமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்காக இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்கம் என்பவற்கு நன்றி தெரிவிகின்றோம்.

வீண் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி தகைமைமிக்க ஒருவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு பாடசாலைச் சமூகம் தடையாக இருப்பதைத் தவிர்த்து, பாடசாலையின் முன்னேற்றம் கருதியும் மாணவர்களின் நலன் கருதியும் புதிய அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு பாடசாலைச் சமூகத்தை வேண்டிக் கொள்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தொடர்ந்தும் அதிபர் நியமன இழுபறி

  1. Vote -1 Vote +1Rahim
    says:

    தகுதியற்றவர்கள் தலைமை பதவிக்கு,தகுதியற்ற அரசியலாளர்களின் தலையீடு மூலமாக நியமிக்கப்பட்டதன் விளைவே இது,கல்முனை மஹ்மூத் பெண்கள் பாடசாலை மாணவர் அனுமதியில் கிடைக்கும் நன்கொடைகளை சுவைத்ததன் ருசியே, தகுதியானவர் அதிபராக வர முனையும்போது உருவாகும் முட்டுக்கட்டையாகும், இதனை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும் நன்கு அறிவார்,அப்படி இல்லையென்றால் அவர் தீக்கோழி நிலைபாட்டில் உள்ளார் என்பதே அதன் அர்த்தம். இடமாற்ற சபையின் அங்கீகாரமின்றி வழங்கப்படும் ஆசிரியர் இடமாற்றங்கள் மார்ச் 31 வரை இரத்து எனும் அவரது அறிவுறுத்தல் அதிபர்களுக்கும் செல்லுபடியாகும் என்று இருப்பின், இது வேண்டுமென்றே தற்போதைய அதிபரை அக்கதிரையில் தக்கவைப்பதற்கான முயற்சியே அன்றி வேறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>