சரிவு கண்டது சீன பொருளாதாரம்

china

பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்த நிலையிலும் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் முதன் முறையாக மிக குறைவான அளவான 7.8 சதவிகித வளர்ச்சிக்கு சரிந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு 10.4 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, 2011ஆம் ஆண்டில் 9.3 சதவிகிதமானது. ஆனால் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவிகிதத்துக்கு வந்துள்ளது.

சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சூப்பர் மார்க்கெட்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் தொடர் பொருளாதார மந்தம் காரணமாக சீனாவின் இறக்குமதி பெருமளவு குறைந்துள்ளதே பொருளாதார சரிவுக்கு காரணமாக கருதப்படுகிறது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>