கல்முனையில் அமைச்சர் மேர்வின்

01

(எம்.சி.அன்ஸார்)

மக்கள் தொடர்பாடல் அமைச்சர்  மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்து அங்குள்ள விகாரை, கோயில், தேவாலயம், பள்ளிவாயல் ஆகியவற்றுக்குச் சென்று ஜனாதிபதிக்கு தெய்வ ஆசி வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.

கல்முனை ஸ்ரீசுபத்திராராமய விகாரை, முருகன் கோயில், வேளாங்கன்னி தேவாலயம், இஸ்லாமாபாத் பள்ளிவாயல் ஆகியவற்றிற்கு அமைச்சர் மேர்வின் சில்வா விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், தென்னங்கன்றுகளையும் நாட்டி வைத்தார்…

கல்முனை மாநகரை தென்னாபிரிக்க மாநகரமொன்றுடன் இணைப்பது தொடர்பில் பேச்சு

03

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கhவின்  அவிபிருத்திக்கான பிரதி அமைச்சர்  இப்றாஹிம் இஸ்மாயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் இன்று சனிக்கிழமை பேச்சு நடத்தியுள்ளார்.
சமகால அரசியல் விடயங்கள் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பின் போது, தென்னாபிரிக்காவிலுள்ள மாநகர சபையொன்றுடன் கல்முனை மாநகர சபையை இணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

ஒலுவில் ஊடாக மாத்தறையிலிருந்து மட்டக்களப்புக்கு புதிய புகையிரத வீதி

P1000606SrLankaTrainStation3

மாத்தறையிலிருந்து மட்டக்களப்பு வரை புதிய புகையிரத வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திட்டப்பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.மாத்தறைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான புதிய புகையிரத வீதியை நிர்மாணிப்பதற்காக ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தறை, பெளியத்த, ஹம்பாந்தோட்டை ஊடாகவும் மொனராகலை, அம்பாரை ஒலுவில் ஊடாகவும் மட்டக்களப்பு வரையிலான இந்த புதிய புகையிரத வீதியை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு வெள்ளைக் கொடி வழக்கில் 3 வருட சிறை

Retired General Sarath Fonseka, listens to a speech introducing him before speaking to labor unions from the Marxist backed opposition party in Colombo
சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை 5000 ரூபா அபராதம் விதித்தும் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை சுட்டுக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் உத்தரவிட்டார் என சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதன் பின்னணியில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வெள்ளைக் கொடி விவகார வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை அல் – அஷ்ஹர் வித்தியாலயத்தில் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி துஆப் பிரார்த்தனை

q1
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை அல் – அஷ்ஹர் வித்தியாலயத்தில் கூட்டமும், ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி துஆப் பிரார்த்தனையும் இன்று நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.றஸாக் தலைமையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு பற்றுதலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சைக்காக விசேட பிரிவு

01

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  நவம்பர் 14 உலக நீரிழிவுதினத்தை முன்னிட்டு நீரிழிவு சிகிச்சைக்கென விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு வைத்தியசாலையின் நான்காம் விடுதியில் இயங்கவுள்ளது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இதற்கான நிகழ்வில் உணவுக்கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு சமைத்தல் மற்றும் ஊசிப் பாவனை போன்ற விளக்கங்களும் வழங்கப்பட்டன.

‘உம்மா என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ – கதறியழுது கெஞ்சிய ரிஸானா

imagesrr
குழந்தை ஒன்றை கொலை செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை அவருடைய பெற்றோர்கள் நேற்று சந்தித்துள்ளனர். 2007ம் ஆண்டு ஜூன் 16ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின் 23 வயதுடைய ரிஸானாவை ரியாத் சென்றுள்ள அவருடைய பெற்றோர் முதன்முதலில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு ´ஒரு நுட்பமான உறவு´ என ரியாத் சென்றுள்ள இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவாட்மி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிஸானா தனது தந்தை மொஹமட் மற்றும் தாய் ரிப்னா ஆகியோரை சந்தித்தபோது அழுது கொண்டே “என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்” என கெஞ்சியுள்ளார்…

கல்முனை முதல்வரை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டும் விழா

DSCN3086

கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் விழா நேற்று இரவ சாய்ந்தமருது பீச் பார்க்கில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் சட்டத்தரணி எம்.சீ.ஏ.அசீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் பிரதம அதிதியாக பங்கேற்றார்.

உலக பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் – பேராசிரியர் பீரிஸ்

untitled
இலங்கையில் பெரும்பான்மை பெளத்த மக்களுடனும், இந்துக்களுடனும் முஸ்லிம்கள் சமாதானமாகவும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். மகத்தான மத சகிப்புத்தன்மையுடனும், தமக்குள்ளான நல்லெண்ணத்துடனும் இங்கு மக்கள் சமூகம் வாழக் கிடைத்தமை பாக்கியமாகும். பிரதமர் தி. மு. ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
உலக முஸ்லிம் காங்கிரஸ¤ம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையமும் ஏற்பாடு செய்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்து பேசுகையில்:-
முஸ்லிம்கள் இலங்கையில் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளனர். நாட்டில் குடியேற்றங்களை உருவாக்கிய அரபு வர்த்தகர்களுக்கு பெளத்த மன்னர்கள் காணிகளையும் புகலிடங்களையும் வழங்கியமை வரலாற்றுப் பதிவாகும். 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் முஸ் லிம்கள் போர்த்துகீசராலும், ஒல்லாந்தர் களாலும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்ட போது மலையகத்தின் பெளத்த மன்னர்கள் முஸ்லிம்களுக்கு குடியிருப்புக்களையும், வசதிகளையும் வழங்கினர்…

முஸ்லிம்களும், பத்திரிகைகளும்

imagesmm
அப்துல்லாஹ்
முஸ்லிம்களின் பிரச்சினைகள் பெரிய அளவில் எடுபடாமல் அடங்கிப் போவதற்கு பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் காரணமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் விரோதப் போக்கு கொண்ட ஊடகங்களை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு முஸ்லிம்களால் நடத்தப்படும் ஊடகங்களை எடுத்துக் கொண்டால் அவை மிக மோசமான கொள்கையுடையனவாக காணப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 21வது கறிய ஒக்டோபா அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் 30ஆம் திகதி வெளியான நவமணி பத்திரிகையில் முன்பக்கத்தில் இது பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. அஹமது நிஜாத்துக்கு 55 வயது என்றும் துமிந்த சில்வாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை போன்ற செய்திகளை வெளியிட்டு வடக்கு முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்துக்கு சாவுமணி அடித்துள்ளது. 

பலஸ்தீன் தனிநாட்டுக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை – பிரிட்டன் அறிவிப்பு

w5
பலஸ்தீன் முழு அங்கத்துவத்திற்கான ஐ. நா. பாதுகாப்புச் சபை வாக்கெடுப்பை தவிர்த்துக் கொள்ளப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. பலஸ்தீன – இஸ்ரேல் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்குடன் பாதுகாப்புச் சபையில் வாக்களிக்காமல் இருக்க பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளதாக அதன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
“பலஸ்தீன விண்ணப்பத்திற்கு எதிராக நாம் வாக்களிக்கப்போவதில்லை. பலஸ்தீன தலைவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று அதற்கு ஆதரவாகவும் நாம் வாக்களிக்கப்போவதில்லை” என்று வில்லியம் ஹக் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் பெருநாள் தொழுகைகள்

prayer 1
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு கல்முனை, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு  பிரதேசங்களில் கடற்கரை திடலிலும் ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.

பெரும் திரளான ஆண்களும் பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டதுடன் தொழுகையினை தொடர்ந்து குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது.

வாசகர்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

nnn
நபி இப்றாஹீம் (அலை)
அவர்களின் அரும்
தியாகத்தை நினைவுகூரும்
ஈதுல் அழ்ஹா
இன்று சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் – கல்முனை பிரதி மேயர் சந்திப்பு

nizam

சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை வாழ் மக்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேடஸ்; தயாராகவுள்ளதாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை பிரதி மேயராக சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதற் தடவையாக இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் அமைப்பின் தலைவருமான மஹ்மூத் முஹம்மட் அல் மஹ்மூதை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த கல்முனை வாழ் மக்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; உதவும் என தூதுவர் உறுதியளித்ததாக நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

தமிழ் கிராமங்களுக்கு கல்முனை மேயர் விஜயம்; மக்களின் குறைகள் தொடர்பிலும் விசாரிப்பு

01
கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று புதன்கிழமை மாலை மாநகர பிரதேசத்திலுள்ள பாண்டிருப்பு, பெரியநீலாவணை, கல்முனை, மணல்சேனை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய தமிழ் கிராமங்களிற்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அப்பிரசேங்களில் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளையும் பார்வையிட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரிட்டனில் சிறை

111101213541_cricketer_304x171__nocredit
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து லண்டன் கோர்ட் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. ‌இந்த குற்றத்தின் மூலம் கிரிக்கெட் மதிப்பையும் குலைத்து விட்டனர் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், 27, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், 28, முகமது ஆமிர் 19, ஆகியோர் “ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டு பிடிபட்டனர். இந்த குற்றம் புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்ட்டதால் அவர்கள் இன்னும் நாடு திரும்ப முடியாது.
கடந்த ஆண்டில் லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஸ்பாட் பிக்சிங் மூலம் கிரிக்கெட் வீரர்கள் ரூ. 10 லட்சம் வரை லஞ்சம் பெற்றனர். தாங்கள் வேண்டும் என்றே தோல்வியை தழுவினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சல்மான் பட் , முகமது ஆசிப் , முகமது ஆமிர் ஆகியோர் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்படட்து.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் சுற்றுப் பயணம் தோல்வியில் ?

canada301011_02

அமெரிக்கா, பிரித்தானியா, கனடாவுக்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து மேற்கொள்ளப்ட்ட முயற்சியும் தோல்வி கண்டுள்ளது.

அதேபோன்று அமெரிக்காவின் வெளிநாட்டு செயலர் கிலாரி கிளிங்டனை சந்திக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியை சந்த்திருந்தது. எனினும் அமெரிக்காவின் வெளிவிவகார அதிகாரிகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரியான லிங்க் பாஸ்கோவ் என்பவரையும் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர் அவர்களுடன் உரையாடிய கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர் என்று அறிய முடிகின்றது.

கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு!

mc-1

கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு திங்கள் கிழமை (31.10.2011)  காலை10.30 மணியளவில்  மாநகர முதலவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஆரம்பமானது.


19 உறுப்பினர்களைக் கொண்ட கல்முனை மாநகர சபையின் இன்றைய முதலாவது அமர்வுக்கு 11 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும்இ 4 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும்இ 3 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் சமூகமளித்தனர்.

மனம் திறந்த பரீட்சை ஆணையாளர் (வாசிக்கத் தவறாதீர்கள்)

Anura-Edirisinghe[1]

எமது தற்போதைய பாடத்திட்டம், பரீட்சை முறை என்பனவற்றை மாற்றவேண்டுமெனத் தெரிவிக்கும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க, இக்கல்விமுறையால் மாணவ சமூகத்தைத் தவறாக வழிநடத்தும் நிலைக்கு நாம் மாற்றிவருகிறோம் என்றார்.

கண்டி மகளிர் கல்லூரியின் 13 ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் பேசுகையில்,
நான் பரீட்சை ஆணையாளராக இருக்கிறேன். எனவே பரீட்சை முறை பற்றி நான் விமர்சிப்பதை யாரும் எதிர்க்க முன்வரமாட்டார்கள் என நினைக்கிறேன்.