பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனில் முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில் வரத் தொடங்கி உள்ளது.
இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கணணிகளில் ஊடுருவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கணணியையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது.