ஏ.எல்.பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் அவசர கவனத்திற்கு..!

Attention

2011 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறு குழறுபடிகள் குறித்து மாணவர்கள் தமக்கு அறியத்தர வேண்டும் என அதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு கோரியுள்ளது.

இதுகுறித்து 0112372280 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாக நெருக்கடிகள் தொடர்பில் மாணவர்கள் முறையிட முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவரும் தொழினுட்ப மற்றும் ஆய்வுகள் அமைச்சின் செயலாளர் தாரா விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் 135 பேர் பல்கலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி

schoolflag

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
2011ஆம் ஆண்டுக்கான  க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் சகல துறைகளிலுமிருந்து  பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் கணிதப்பிரிவில் எம்.எச்.எம்.ஸஸ்னி,  எம்.எச்.எம்.முர்ஸித், உயிரியல் பிரிவில் எம்.ஜே.சாமித் ஸீத், கலைப்பிரிவில் கே.எல்.றியாஸ் அஹமட், எம்.ஏ.எம்.முஹாஜிர் ஆகியோர் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றுள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் – துஆ இணைவு; பிரதி தலைவராக ஹாபீஸ் நஷீர் அஹமட்?

12121

(ஆயிஷா சுஹைர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி ஆகிய இரு கட்சிகளும் இணைவதற்கான பேச்சு நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சொத்துக்கள் தொடர்பிலான சட்டப் பிரச்சினைகள் குறித்து இடம்பெறும் பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடையுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவராக ஜனநாயக ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் ஹாபீஸ் நஸீர் நியமிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்!

child

பெற்றோர்கள் பொதுவாக ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட்டு பேசுவார்கள். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் ஒப்பிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.

பெற்றோர்கள் இவ்வாறு பேசுவதினால் ஒரு குழந்தையை பார்த்து மற்ற குழந்தை தன் தவறை திருத்திக் கொள்வர் என நினைகிறார்கள். ஆனால் ஒப்பிட்டு பேசுவது என்பது எந்த ஒரு குழந்தையினாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

வேலைவாய்ப்புகளை தரும் Operational Research புதிய படிப்பு!!

Operational Research

பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளை தவிர்த்து பணி வாய்ப்புகளை அளிக்கும் ஏராளமான துறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடத்தை ஆப்பரேஷனல் ரிசர்ச் வகிக்கிறது. (Also Referred as decision science, or management science)

How to learn? எளிமையாக படிக்கும் முறை!!

How To Learn

How to learn? எளிமையாக படிக்கும் முறை!!

ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிகவும் அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நோக்கில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.

லிபியாவில் இரத்தம் ஓடுமா..? இஸ்லாமிய சாம்ராஜியம் மலருமா..??

carlos-latuff-smells-like-foreign-intervention-libya-march-9-2011
மொத்த போராளிகள் எண்ணிக்கை 45000. போராளி குழுக்களின் எண்ணிக்கை 59. இதில் இஸ்லாமிய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டவை 11. சோஷலிஸ அடிப்படையிலமைந்தவை 13. பழங்குடி இனக்குழுக்களிற்கு சொந்தமானவை 19. கடாபி ஆதரவு குழுவினர் 08. ஆக மிகுதி 06. இந்த 06 குழுக்கள் மட்டும் மேற்குலகின் அதாவது நேட்டோவின் கட்டுப்பாட்டில்.

இதுதான் இன்றைய லிபியா. 2012ம் வருடம் லிபியாவின் உள்நாட்டு போரிற்கான ஆமுல் ஹர்ப் (யுத்த ஆண்டு). அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. இப்போது பல பழங்குடி தலைவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. சிலரை வாஷிங்டன் அழைத்து நேரடியாக பேசியுள்ளது. பலரை பாரிஸில் வைத்து பேசியுள்ளது.

தலைமைக்கு தேவையா தகுதி ??? மஹிந்தவுக்கு தேவையா உயர்தரம் ???

president1

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜி.சி.ஈ உயர்தரத்தை பூர்த்தி செய்யாதவர் ஆவார் என்பதை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தி உள்ளது

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணத்தில் மஹிந்தர் உயர் தரத்தை பூர்த்தி செய்யாதவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜனவரி முதல் யாழ் மண்ணில் முதுகல்விமாணிக் கற்கை நெறி

2253513

தேசிய கல்வி நிறுவகம் நடத்தும் முதுகல்விமாணிக் கற்கை நெறி முதன்முறையாக யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

கல்விவாண்மை, அனுபவம் கொண்ட தகுதியானவர்களைக் கொண்டு இந்தக் கற்கைநெறிக்கான விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.

யாழ். மாவட்டத்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள விரிவுரையாளர்கள் மட்டுமே இதற்கு விரிவுரையாற்ற வேண்டும் என்ற மட்டுப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பதூர்நகர் பிரதேசத்தில் மர்மப்பொருள் வெடிப்பு!

danger

அக்கரைப்பற்று பதூர்நகர் பிரதேசத்தில் காணி ஒன்றில் கிடந்த இரும்பிலான பந்து போன்ற மர்மப் பொருள் ஒன்றை இரு சிறுவர்கள் இன்று (02.01.2012) பிற்பகல் இரும்பு பந்து என எறிந்து விளையாடிய போது அவ் மர்மப் பொருள் வெடித்து ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்கில் இருந்து இலங்கையின் அபிவிருதிக்கு ஒரு குரல் (பட இணைப்பு )

தென்கிழக்கில் இருந்து இலங்கையின் அபிவிருதிக்கு  ஒரு குரல்...
ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையை மாற்றும் கனவை நனவாகுவதட்கான சத்திய பிரமாணம் 2012 எனும் தொனிபொருளில் இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது  பல்கலைகழகதின் பதிவாளர் எச் .அப்துல் சத்தார்,பீடாதிபதிகள் ,திணைக்கள தலைவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களும் கலந்து கொண்டனர் .

கல்முனை கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்தின் அங்குரார்ப்பண விழா!

royal 3

கல்முனை பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்தின் அங்குரார்ப்பண விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிறீன்பீல்ட் வீட்டு திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர் கே.பஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.டீ.ஏ.தௌபீக் மற்றும் பிரதி வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை: பைசால் காசிம் எம்.பி

faizal(1)

பல குறைபாடுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கும் நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பனர் பைசால் காசிம் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து நிர்வாகத்தினரும் பொதுமக்களும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா!

Picture 610

மருதமுனை டெக் லேன் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் விழா குழு தலைவர் ஏ.ஆர்.ஸாலிஹ் தலைமையில் மருதமுனை அல்-மனார் மண்டபத்தில் நடை பெற்றது.விழாவுக்கு வருகை தந்த அதிதிகள் வரவேர்க்கப் படுவதையும், பூரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப்  மாணவன் எம்.எம்.அதூப் அகமதுக்கு சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.

இவ்வருடத்தில் அதிகம் பார்வையிட்ட தளங்களின் வரிசையில் google மற்றும் facebook முன்னிலையில்…

google-vs-facebook


2011 இல் அதிகம்  பார்வையிட்ட தளமாக google முதன்நிலை வகிகின்றது . இருப்பினும் சமூக இணையதளங்கள் வரிசையில் facebook தன து முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது 

சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயர் மாற்றம் இரத்து: ஏறாவூர் பற்று தவிசாளர்

iraq(6)

(றிப்தி அலி)
ஏறாவூர், சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என பெயர் மாற்றப்பட்டதை இரத்து செய்துள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.வினோத் தெரிவித்தார்.

குறித்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையினாலும் பெயர் மாற்றப்பட கூடாது என கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்தமையினாலுமே, இப்பெயர் மாற்றத்தை இரத்து செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

A/L பரீட்சையில் கல்முனை ஸாஹிரா மாணவர்களின் சாதனை (படங்கள் இணைப்பு)2nd update

BEST PERFOMANCE

 

இம்முறை கல்முனை ஸாஹிரா கல்லூரியின்  சிறந்த பெறுபேறுகள்  பெற்ற மாணவர்களில் சிலர் விபரம்.. 

கல்முனை ஸாஹிராவின் சாதனை வீரர்களுடன் AIMS அமைப்பினரின் ஒரு சந்திப்பு !!!

Meeting with AIMS

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி வழமை போன்று இம்முறையும் தமது ஆதிக்கத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைத்துக்கொண்டது .

இதன்படி இறுதியாக வெளியாகிய க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் பொறியியல் பீடத்திற்கு 11 மாணவர்களும் மருத்துவ பீடத்திற்கு 2 மாணவர்களும் முகமைத்துவ பீடத்திற்கு 6 மாணவர்களும் கலைப்பீடத்திட்கு 4 மாணவர்களும் மற்றும் உயிரியல் , பௌதிகவியல் துறைகளுக்கும் கணிசமான அளவு மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பினை பெற்றுள்ளனர் .

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மாவட்டத்தில் உயிரியல்துறையில் முதலிடம்

siyatha-1-150x150

வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல்துறையில் 3ஏ க்களைப்  பெற்று அம்பாறை மாவட்டத்தில்  முதலிடம் பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா  சியாதாவையும் அவரது குடும்பத்தினரையும் 
படங்களில் காணலாம்.