தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்…

postal_vote_2010_11

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடை பெறவுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றோர் நேர காலத்துடன் தமது அலுவலகங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தகம் படிப்பது மூளைக்கான மருந்து – ஆய்வில் முடிவு

images

புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல -அது மூளையை உற்சாகப்படுத்தும் மருந்து என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட வருகையும் ஏமாற்றம் அடைந்த முஸ்லிம்களும்!

999

-அஸ்ரப் ஏ சமத்-

அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் நிர்மாணிக்கப்பட்ட சவுதி வீடமைப்புத்திட்டத்தினை ஜனாதிபதியை அழைத்து அதனை உரிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

நான் இருக்கும்வரை எந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படமாட்டாது; கல்முனையில் ஜனாதிபதி சத்தியம்! (படங்கள்)

mr

-எஸ்.அஷ்ராப்கான்- 

நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்தவொரு பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இது சத்தியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் உறுதியளித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் மட்டும் அரச உயர் அதிகாரிகளாக படை உயரதிகாரிகள் ஏன்!- ஹக்கீம் கேள்வி

hakeem

நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆளுநர்களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில், வடக்கு, கிழக்கில் படை உயரதிகாரிகள் அவ்வாறான பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ஏன் என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்மாந்துறை விஜயம்! (படங்கள்)

99

-அஸ்றிப் அஹமட்-

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டபைபில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை-ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திற்கு நீளமான வாக்குச்சீட்டு

9090

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் மூன்று மாகாணங்களையும் விட கிழக்கில் நீளமான வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கு வாய்த்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் ஊடாக நாம் பெற்றிருக்கின்றோம்-ரவூப் ஹக்கீம்

121

-எஸ்.அஷ்ரப்கான்-

கிழக்கு மாகாணத்தின் ஆட்சி, அதிகாரம், அந்தஸ்து என்கின்ற விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு வாய்த்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் ஊடாக நாம் பெற்றிருக்கின்றோம் என  ஸ்ரீ.ல.மு.கா.தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த நாளை கல்முனை வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

mj- kalmunai

கல்முனை பிரதேசத்திற்கான ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்களுடனான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்திரனில் முதன் முதலில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்! (வீடியோ)

nbc_neil_armstrong

நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் (first man on the moon) என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ரோங் தனது 82-வது வயதில் மரணமானார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே! இரா.சம்பந்தன்

tna

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என திட்டவட்டமாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணியின் (FJP) பொதுமேடைக் கூட்டம்

fjp-najah-mohamed

நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -FJP- ஏற்பாடு செய்திருந்த ஒரே மேடையில் கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது அரசியல் கொள்கைகள் மற்றும்

கல்முனை தமிழர் கலாசார மண்டபம் 35மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி

12 (1)

-எம்.எம்.ஜபீர்-

அம்பாறை மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் (தயட்ட கிருள்ள) தேசிய கண்காட்சியை முன்னிட்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் கிழக்கை பிரதிநிதித்துவபடுத்திய தமிழர் கலாசார மண்டபம் சுமார் முப்பத்தைந்து (35) மில்லியன் ரூபாய் செலவில் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படள்ளது.

பசீர் சேகுதாவூத் பதவியை ராஜினாமா செய்ததுபோல ஹக்கீமும் செய்யவேண்டும்! ஜவாஹிர் சாலி

slmc

அமைச்சுப் பதவியோ பிரதியமைச்சுப் பதவியோ எனக்கு முக்கியமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம் அரசியலும் முஸ்லிம் சமுதாயமும்தான் முக்கியமென்பதை தனது பதவியை தூக்கி எறிந்து பசீர் சேகுதாவூத் நிரூபித்துள்ளார். என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜவாஹிர் சாலி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு மாரடைப்பு! வைத்தியசாலையில் அனுமதி

vw

இலங்கையின் வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒலுவில்; உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் கடலில் மூழ்கி மரணம்

oluvil

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் நான்குபேர் ஒலுவில் கடலில் குளிக்கச் சென்றதில் ஒரு மாணவன் கடலில் மூழ்கி சடலமாக இன்று (23) மீட்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவு பிரதியமைச்சர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இராஜினாமா

897897

உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சராக பசீர் சேகுதாவூத் கடமையாற்றி வந்த பசீர் சேகுதாவூத் பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரைகள் அடுத்த வாரம் ஆரம்பம்???

university lectures strike in srilanka

தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு அடுத்த வாரம் முடிவடைவதற்கான சாத்தியமுள்ளதாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தையின்பின் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருது வீதிகள் தொடர்பான அபிவிருத்தி கூட்டம்

223

சாய்ந்தமருது வீதிகள் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் (22) புதன்கிழமை இடம்பெற்றது.