முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்க புதுவழிகள் அவசியம் – சேகு இஸ்ஸதீன்

sq
கேள்வி:- நீண்ட நாள் மெளனத்தைக் கலைய விட்டு முஸ்லிம் அரசியல் பற்றி நீங்கள் விடுத்த அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. இந்தத் திடீர்த் திருப்பத்துக்கு என்ன காரணம்?
 
பதில்: திடீர்த் திருப்பம் என்று பெரிதுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை.  நிருபர் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு முஸ்லிம் அரசியல் போக்கைப் பற்றி அங்கலாய்த்து அரசு – தமிழர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை பற்றிய எனது கருத்தைக் கேட்டார்.
நிருபர் கேட்டார் என்பதனால், முஸ்லிம் அரசியலுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தைக் கெளரவப்படுத்த வேண்டும் என்ற

கல்முனையில் நேற்று இரவு கடையை உடைத்துக் கொள்ளை!

45798526-56e8-4d45-9499-86cd6ab161ca_S_secvpf

கல்முனையில் உள்ள சயான் சுவீட் சென்டர் எனும் வர்த்தக நிலையத்தை நேற்று இரவு இனம்தெரியாத கும்பல் உடைத்து கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு – கல்முனை மாநகர சபைகள் இணைந்து செயற்பட இணக்கம்: மேயர் சிராஸ்

011

கொழும்பு மாநகர சபையும் கல்முனை மாநகர சபையும் இணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதாக கல்முனை மேயர் சிராஸ் மிராசாஹிப் தெரிவித்தார்.

கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிணங்க இரு மாநகரங்களுக்குமிடையில் கல்வி, கலை, கலாசார மற்றும் அரசியல் போன்ற விடயஙகளில் பரிமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக மேயர் சிராஸ் மேலும் தெரிவித்தார்.

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸும் இணக்கத்துடன் செயற்பட தீர்மானம்!

nz
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களை மீண்டும் இணைக்கும் போது முஸ்லிம்களின் பங்கு மிக முக்கியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் பேச்சுவாத்தை இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக இரு கட்சிகளும் தொடர்ந்து பேச்சு நடவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைபபிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பாக இச்சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாலமுனை மாவட்ட வைத்தியசாலையின் அவலநிலை!

addalaichenai

பாலமுனை மாவட்ட வைத்தியசாலை மிகவும் பழைமையான ஒரு வைத்தியசாலை. ஆனால், இங்குள்ள நிருவாகிகளோ ஏனோதானோ என்று காணப்படுகின்றனர். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு துண்டு வழங்கவென பலர் காணப்படுகின்றனர்.

ஆனால் நோயாளிகள் வருகை தந்தால் அவர்களால் விரைவாக துண்டுகள் வழங்கப்படுவதில்லை. காரணம் கேட்டால் அப்படித்தான் என்பார்கள். ஐயா இன்னும் வரவில்லை என்பார்கள். அல்லது ஐயா உள்ளே வேலையாக இருக்கிறார் என்பார்கள். ஒருகாலத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்த இந்த வைத்தியசாலையின் நிருவாகக் கட்டமைப்புக்கள் ஒழுங்கின்றி காணப்படுவதற்கு யார் யார் காரணம் என்பது புரியவில்லை.

அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் கொண்டாட்டம்

அமெரிக்க-ராணுவம்-வாபஸ்-ஈராக்கில்-மகிழ்ச்சி-கொண்டாட்டம்-263x170

அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி தெரிவித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ‘அமெரிக்கா தொலைந்து போகட்டும்’ என முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொடிகளை எரித்த மக்கள் ’நாங்கள் இப்பொழுது சுதந்திரமானவர்கள்’ என்ற பேனரை கையில் பிடித்தவாறு போராட்டத்தை நடத்தினர்.

கல்முனை மேயர் முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமனம்!

Untitled-1

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்கட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸின் யாப்பின் படி உள்ளூராட்சி மன்றமொன்றின் தலைவர் பதவி வழி ரீதியாக கட்சியின் அதியுயர் பீட நியமிக்கப்படுவார். அதனடிப்படையிலேயே கல்முனை மேயர் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

குறித்த உள்ளூராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து இழக்கப்படும் போது அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் இழக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

44(4)

கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்ட இடமாற்றத்தை கண்டித்து நேற்று கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இடமாற்றம் செயப்பட்டுள்ள ஆசிரிய,ஆசிரியைகளும் அவர்களுடைய சிறு குழந்தை களும் கலந்து கொண்டு கோஷமிட்டனர். எங்கள் குடும்பங்களை பிரிக்காதே ,தாய் ஒருஇடம், பிள்ளை ஒரு இடம்.  தந்தை ஒரு இடமா, என்பன போன்ற கோசங்களை எழுபியவர்களாக கல்முனை நூலக முன்றலில் இருந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகம் வரை எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவர்களாக ஊர்வலமாக சென்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு மகஜர் கய்யளிதனர்.

சட்ட முறைமையில் பாரிய மாற்றங்கள் எற்படுத்தப்படும்: அமைச்சர் ஹக்கீம்

rauf1(1)

(றிப்தி அலி)

தற்போது நடைமுறையிலுள்ள சட்ட முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதன் மூலம் சுமார் 8 தொடக்கம் 9 வருடங்கள் எடுக்கும் வழக்கு விசாரணைகளை ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் அடுத்த வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்ட வரைஞர் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கற்பிட்டியில் 500 ஏக்கர் காணியை கட்டாருக்கு வழங்கியது அரசாங்கம்

600x231xPrime-Minister-of-Qatar-meets-President.jpg.pagespeed.ic.mOO7HIlFOF
கற்பிட்டியில் உள்ள ஐந்து தீவுகளில் உள்ள 500 ஏக்கர் காணியை, இலங்கை அரசு கட்டாருக்கு வழங்கவுள்ளது. இதில் சுற்றுலாக் கிராமமொன்று உருவாக்கப்படவுள்ளது. பல வகையான அபிவிருத்தித் திட்டங்களை இது உள்ளடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வந்துள்ள கட்டார் பிரதமர் ஷெய்க் அஹமத் பின் ஜாஸிம் பின் ஜப்ர் அல்-தானி, நிதியமைச்சர் யூஸுப் ஹுஸைன் கமால் ஆகியோர் அடங்கிய தூதுக் குழுவினர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோரை பல தடவை சந்தித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் சஊதி அரேபியாவில் உயிரிழந்துள்ளார்

asraf-kabar

சவூதி அரேபியாவில் காத்தான்குடியைச் சேர்ந்து 22 வயதுடைய அப்துல் கப்பார் அஷ்ரப் என்பவருடைய ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 நாட்களுக்கு முன்னர் இவர் சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு சென்றுள்ளார். சாரதி தொழில் வாய்ப்புப் பெற்று அங்கு சென்றுள்ள இவர் கடந்த இரு நாட்களாக வேலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் இவர் தங்கியிருந்த அறை உடைத்துப் பார்க்கப்பட்டபோதே அவரின் ஜனாஸா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பான முழுவிபரம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென மரணமானவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி விடுதி மாணவிகள் தின நிகழ்வு!

mlc0

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி விடுதி மாணவிகள் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதி மேயர் நிஸாம் காரியப்பர், அவரது பாரியார்  மிஸ்ரியா நிஸாம் காரியப்பர், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் இக்கல்லூரியின் ஸ்தாபக அதிபர் எம்.ஸீ.ஏ.ஹமீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை முஸ்லிம் பெண்கள் கல்வியில் முதற் தரமாக விளங்கும் இக்கல்லூரியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயில்கின்றனர்.

மரக்கறி மற்றும் பழ வகைகளை போக்குவரத்து செய்வது குறித்த சட்டத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

fruit-and-vegetable-play-food-basket

மரக்கறி வகைகளை போக்குவரத்து செய்வது தொடர்பான புதிய சட்டங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மரக்கறி மற்றும் பழவகைகள் பிளாஸ்டிக் கூடைகளிலேயே போக்குவரத்து செய்ய வேண்டுமென அண்மையில் அறிவிக்கப்பட்டதும், இந்த சட்டத்திற்கு விவசாயிகளும் விற்பனையாளர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

எனினும், சட்டத்தை மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் அறிவித்துள்ளார்.

முறைப்பாட்டுக்கு தீர்வு காண 15 நிமிடங்களுக்குள் நடவடிக்கையில் இறங்கிய மேயர்

new

கல்முனைப் பிரதேச வீதியொன்றின் பிரச்சினை தொடர்பில் சுமார் 15 நிமிடங்களுக்குள் தீர்வு காண்பதற்கான முயற்சியினை மேயர் சிராஸ் மீராசாஹிப் அண்மையில் மேற்கொண்டார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள காசிம் வீதியின் முகப்பில் தனியார் மருத்துவ மனையொன்று அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனைக்கு வருகை தருவோர் அனைவரும் மேற்படி மருத்துவமனையின் முன்னால் -  வாகனங்களை நிறுத்தி வைப்பதால் வீதியின் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு ஏற்படுவது வழமையாகும்.

மக்களின் வசிப்பிடத்தைக் செயற்கைக்கோள் படத்துடன் காண கணக்கெடுப்பு

untitled
இலங்கையில் உள்ள அனைத்து குடிமக்களினதும் விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்றை இராணுவம் மேற்கொள்ளவுள்ளது.  புவிசார் குடிமக்கள் தகவல் முறைமைத் திட்டம் என்ற பெயரில் இராணுவம் 2.5 மில்லியன் ரூபா செலவில் இந்த தகவல்களை திரட்டவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் இராணுவமும் இணைந்து இந்த தகவல் திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளன. தென்கிழக்காசியாவிலேயே இலங்கையில்தான் இது முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்ய வேண்டுகோள்

new

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக இரத்துச்செய்யுமாறு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் ஜனாதிபதிக்கும், கிழக்கு மாகாண ஆளுனருக்கும், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் போன்றவற்றுக்கும் அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்களுக்குள்ளும் வலயங்களுக்கு வெளியிலும் வெளிமாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றத்தினால் அதிகமான ஆசிரியர்கள் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகின்றன.

kaar

போக்குவரத்து விதிகளை வீதியில் செல்லும் யாரோ ஒருவர் மீறுவதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகின்றன.

க. பொ. த (சாதாரண தர) பரீட்சை இன்று நாடு முழுவதும் ஆரம்பம்

images

க. பொ. த (சா.த) பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பமாகும் இப் பரீட்சை எதிர்வரும் 21ம் வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பரீட்சைக்காக 5,50,000 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ள தாகவும் இவர்களுள் 3,10,000 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகள் எனவும் இவர்களுக்காக வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடளாவிய ரீதியில் 3600 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணை யாளர் நாயகம் அநுர எதிரிசிங்ஹ தெரிவித்தார்.

கொழும்பில் நெலும் பொக்குன மாவத்தை என்ற பெயரில் புதிய வீதி

18606979601374876560lotus
ஹோட்டன் சுற்றுவட்டத்தில் இருந்து பொது நூலகம் வரையான வீதிக்கு நெலும் பொக்குன மாவத்தை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி இவ்வீதி பெயர் மாற்றப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.