பெண்களை கிண்டலடித்தற்காக மொட்டை அடிக்கப்பட்ட 9 வாலிபர்கள்

headshaving

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள சால்மியா எனும் பகுதியில் உள்ள ஒரு பிஸியான ஷாப்பிங் மாலில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த இளம் பெண்களை 9 வாலிபர்கள் அநாகரீகமான சொற்களை கூறி கிண்டல் செய்தனர்.

இதை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டியினர் 9 வாலிபர்களையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட 9 வாலிபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின் 9 வாலிபர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. பின் பொதுமக்கள் முன்னிலையில் இனி இத்தகைய தவறு செய்ய மாட்டோம் என்று எழுதி கையெழுத்திட்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அறிவித்தல்

acju

இவ்வருடத்தின் இறுதிக்கிரகணமான பூரண சந்திர கிரகணம் இன்ஷாஅல்லாஹ் இன்று சனிக்கிழமை (10.12.2011) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கைக்கும் இது உச்சம் கொடுக்குமெனவும் இலங்கை நேரப்படிஇரவு 6.15 முதல் பகுதிக் கிரகணத்தின் உச்சம் ஆரம்பமாகி இரவு 8.00 மணியளவில் பூரண உச்சம் கொடுக்குமெனவும் தெரிவிக்கின்றன.

இவ்வாறான கிரகணங்கள் ஏற்படும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுங்கள், இறைஞ்சுங்கள், பிழை பொறுக்கத் தேடுங்கள் என்று உபதேசம் செய்வதுடன் கிரகணத் தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்.

நேட்டோ படையினருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

05

இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாயில் முன்பாக நேட்டோ படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.  இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியம் இலங்கை  மற்றும் இலங்கைவாழ் பாகிஸ்தான் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கும் நேட்டோ படைகளுக்கும் எதிராக பல்வேறு வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனையில் கட்டாக்கலிகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பம்

d

கல்முனை மாநகரில் கட்டாக்காலிகளை பிடிக்கும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டாக்கலிகளை பிடிப்பதற்கு செல்லும் முன்னர் மாநகர முதல்வர் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதையும் ,கட்டாக்காலி மாடுகள் அடைக்கப் படுவதையும் காணலாம்.

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல்

7676

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் கமநெகும திட்டத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள அபிவிருத்தித் திட்டம் பற்றிய கலந்துரையாடலொன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைற்றது.

இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப்,  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,  பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனை ஸாஹிரா கல்லூரி ஆங்கில பிரிவு மாணவர்களின் கலை விழா!

zck bin 6 (Small)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் ஆங்கில பிரிவு மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலை விழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்று கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் ஆங்கில பிரிவு பகுதித் தலைவர் எம்.எஸ்.அலிகான் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் மற்றும் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மட்டக்களப்பு பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் கல்முனை அஹுரா ஜுவலரி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எம்.பர்விஸ் அமீர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு கல்லடிப் பாலம் மீண்டும் மூடப்படுகிறது!

12124258
மட்டக்களப்பு கல்லடிப் பாலம் திருத்த லேலைக்காக மீண்டும் எதிர்வரும் சனிக்கிழமை (2011-12-10) இரவு 11.00மணி தொடக்கம் அதிகாலை 04.00மணிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்படுகிறது.

சுமார் 70 வருடங்கள் பழமைவாய்ந்த இப்பாலம் ஜனாதிபதியின் துரித அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தற்போது மிக வேகமாக முழுமையாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம் கடந்த நவம்பர் மாதம் புனர்நிர்மான பணிக்காக முதன் முறையாக மூடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டதோடு இரண்டாவது முறையாக எதிர்வரும் சனிக்கிழமை இரவு 11.00மணி தொடக்கம் அதிகாலை 04.00மணிவரை மூடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகரீக வாழ்வின் தொழில்நுட்ப மாற்றங்கள்

change_world_007

உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டுவரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாகஏற்பட்டு வருகின்றன.

அறிவியல், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன

அம்பாறையிலுள்ள பல வைத்தியசாலைகள் மாகாண சுகாதார அமைச்சினால் புறக்கணிப்பு: கே.எம்.ஜவாத்

20035_100189980016243_100000757233204_2318_7990083_n

அம்பாறை மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் குற்றஞ்ஞாட்டினார்

கல்முனை பிரதி மாகாண சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கான 2012ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வரவு செலவு திட்டத்தில் 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதிகளை பகிர்தல் தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை கல்முனையிலுள்ள பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாயலத்தில் நடைபெற்றுள்ளது.

தலைவர் பதவிக்கு போட்டியிட நான் தயார் – கரு அறிவிப்பு

Karu_Jayasuriya-300x185

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட தான் தயார் என அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை விடுத்து கரு ஜயசூரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கரு ஜயசூரிய இன்று விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுமாறு எனக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. அவற்றை நான் தொடர்ந்தும் நிராகரிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

கல்முனை மேம்பாலத்துக்கு வேண்டுகோள்

DSCF0009
(சம்யா)  
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்னால் சனநெருக்கடி காணப்படுகின்றது. நண்பகல், மாலை வேளைகளில் வைத்தியசாலைக்கு வரும் பார்வையாளர்களால் வைத்தியசாலை சுற்றுவட்டம் இடநெருக்கடி விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறன்து.
வீதியின் ஓரங்களில் நிறுத்தப்படுகின்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் காரணமாகவும் வீதியில் நெருக்கடிநிலை காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்காக வீதியின் குறுக்காக மேம்பாலம் அமையுமானால் சனநெருக்கடியைக் குறைக்கலாம். கல்முனை மாநகரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய மேயர் இதில் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றர்.

கட்டாக்காலி மாடுகளை பிடித்து தண்டப்பணம் அறவிட கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

Untitled-3

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் அறவிடும் நடைமுறையை எதிர்வரும் திங்கட்கிழமை (2011.12.05) தொடக்கம் நடைமுறைப்படுத்த கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் இன்று (02) கல்முனை மாநகர சபையில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்டாக்காலியாக திரியும் மாடுகள் தெருவிலும், குடியிருப்பாளர்களின் இடங்களிலும் குறிப்பாக பிரதான வீதிகளிலும்

தென்கிழக்கு பல்கலைக்கழக கண்காட்சி

SEUSL (8)
(எஸ்.எல். மன்சூர்) 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கண்காட்சி, பண்பாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும். இன்றைய தினத்தில் காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்காட்சிக் கூடங்களுக்கு பாடசாலை மாணவர்களும், பெரியவர்களும் என அணிதிரண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சில திறந்தவெளி கலாசார நிகழ்வுகள் தவிர்ந்தவை மாலையில் ஆரம்பிக்கப்படும் எனக்கூறப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பல இடங்களில் காட்சிக்கூடங்கள் நிறுவப்பட்டிருந்தமை மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குறிப்பாக கலாசார அரும்பொருட்சாலை கூடம் சிறப்பாக இருந்தது. இலங்கையில் வாழ் முஸ்லிம் சமூகத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழ்ந்த முன்னோர்களது வளமார் முதுசங்களைப் பட்டியலிட்டு பாதுகாத்துக் கொண்டு அவற்றை எதிர்கால சந்ததிகளும் அறிந்து கொள்ளும்படி செய்துள்ளமை மிகவும் வரவேற்கக் கூடியதொரு அம்சமாகும்.

ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

sathaam_protest_02
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளி அழிவு ஏற்பட்டபோது ஈராக் உதவியுடன் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக இக்கிராமம் உருவாக்கப்பட்டது. அப்போது ஈராக் நாட்டின் அதிபராக சதாம் ஹுஸைன் பதவியிலிருந்தமையினால் இக்கிராமம் சதாம் ஹுஸைன் கிராமம் என மக்களால் பெயர் சூட்டப்பட்டது.

நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகிக்க போவதில்லை : சம்பந்தன் தெரிவிப்பு

r_sambandan
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அரசாங்கத்துடன் இடம் பெற்ற பேச்சுவார்தையின் போது இது தொடர்பாக தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும் இந்த அழைப்பினை தாம் நிராகரித்ததாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய மன்றத்தினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்கள் அன்பளிப்பு

images

ஆசிய மன்றத்தினால் அம்பாறை மாவட்டதிலுள்ள பாடசாலை நூலகங்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளதாக ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சி திட்ட அதிகாரி றிசாட் ஷெரீப் தெரிவித்தார்.

இதனடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள 62 பாடசாலைகளுக்கும் சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள 68 பாடசாலைகளுக்குமே புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளது  என அவர் குறிப்பிட்டார்.

இந்த புத்தகங்கள் மிக விரைவில் உரிய வலய கல்வி பணிப்பாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக றிசாட் ஷெரீப் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா தாக்கினால் திருப்பித் தாக்குவோம் பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி

13736_NewsPGMPHov

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் இராணுவ நிலைகளைத் தாக்கினால், திருப்பித் தாக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் இராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிடக்கூடாது – ஹக்கீம்

Hakeem
யுத்தம் முடிவடைந்து, சமாதானம் நிலவும் சூழ்நிலையில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண முற்படும் போது முஸ்லிம்களின் பரிமாணத்தை புறந்தள்ளிவிடாமல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதேவேளையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான பாராளு மன்ற தெரிவுக்குழு நியமனம் வரவேற்கத்தக்கதெனவும், அத்தெரிவுக்குழுவின் ஊடாக சிறந்த முடிவை எட்டக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாமெனவும் நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மை சந்தித்த ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியிடம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

cims 2
சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் கணினி துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.


யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் சிம்ஸ் கெம்பஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அன்வர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவன திட்ட அபிவிருத்தி முகாமையாளர் நேசராசா தம்பிராஜா பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனூசியா சேனாதிராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.