ரவூப் ஹக்கீம் அவர்களே இது தகுமா..?

nizamkariyapper290

கல்முனை மாநகர சபைக்கான மேயர் யாரென்பதனை தீர்மானிப்பதற்கு இரண்டு நாட்கள் தேவையில்லை. அதனை ஒரு சில மணித்தியாலங்களில் செய்திருக்க முடியும்.இரண்டு நாட்களாக காலத்தை கடத்தியதனால் ஒற்றுமையாக இருந்த சாய்ந்தமருது, கல்முனை ஊர்களை இரண்டாகப் பிரித்துள்ளார்கள். இதனை திட்டமிட்டதொரு சதியாகவே பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு கல்முனை மாநகரசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 13948 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ள சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனையில் அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெவித்தார்…

முன்னாள் அமைச்சர் மன்சூர் கல்முனையில் கௌரவிப்பு

சட்டத்துறையில் ஐம்பது  வருடம் பூர்த்தி செய்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை நீதி மன்றத்தில் சனிக்கிழமை நடை பெற்றது இவ்வைபவத்திற்கு வருகை தந்த அமைச்சர் ரவுப் ஹக்கீம்,உயர் நீதி மன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அமீர் இஸ்மாயில் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் வர்வேர்கப்படுவத்தையும் முன்னாள் அமைச்சர் மன்சூர் கௌரவிக்கப் படுவதையும் காணலாம்.

கல்முனை மேயராக சிராஸ் மீராசஹிபும், பிரதி மேயராக நிசாம் காரியப்பரும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

கல்முனை மாநகரசபையின் மேயராக சிராஸ் மீராசஹிபும், பிரதி மேயராக நிசாம் காரியப்பரும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று ஞாயிறு காலை  9.47 இற்கு  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போது பொதுஜன ஐக்கிய முன்னணி கைப்பற்றிய ஏனைய 21 உள்ளூராட்சி

மன்றங்களின் பிரதானிகளும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கல்முனை மாநகர மேயராக முதல் இரண்டு வருடங்களுக்கு சிராஸ்

kalmunai mayor sainthamaruthu siraz meerasahib kalasem

பிரதி மேயராக சட்டதரனி நிசாம் காரியப்பர்
கல்முனை மாநகர மேயராக முதல் இரண்டு வருடங்களுக்கு சாய்ந்தமருதைச்சேர்ந்த மீராசாகிப் சிராஸை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையின் சர்ச்சைக்குரிய மேயர் விவகாரம் தொடர்பாக இன்று காலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  றஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் தலைவரும் அமைச்சருமான  றஊப் ஹக்கீம், மற்றும் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் கல்முனை மாநகர மேயர் விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது.

கல்முனை மாநகர சபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக  சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட சிராஸ் மற்றும் கல்முனையிலிருந்து போட்டியிட்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகிய இருவரும் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் என்றே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது….

கல்முனை மாநாகர சபையை ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்ரஸ் கைப்பற்றியது

நடைபெற்று முடிந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

அதேபோன்று கல்முனை மாநகர சபையில் தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களையும் ஐ.ம.சு.கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஐ.தே.கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள்

23 உள்ளூராட்சி சபைகளுக்கான வெளிவர தொடங்கியுள்ள. இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன. கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸ, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகர சபைக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை – முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய 5 பிரதேச சபைக்குமான

உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகளை இங்கு பார்க்கவும்

கொழும்பு, கல்முனை அடுத்த மேயர் யார் – முஸ்லிம்களிடையே பரபரப்பு

கொழும்பு மற்றும் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் மேயராக வாய்ப்பிருக்கும் நிலையில் அடுத்த மேயர் யார் என்ற பரபரப்பு நாட்டு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது.

கல்முனையில் அநேகமாக முஸ்லிம் மேயர் ஒருவர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் முஸ்ம்மில் அடுத்த மேயராக வருவாரென்ற நம்பிக்கையில் முஸ்லிம்கள் காத்திருப்பதாக மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை 23 உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை 8 ஆம் திகதி காலை 7  மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன.

இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைகின்றது

23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றன. தேர்தல் தொடர்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், கட்அவுட் அனைத்தையும் இன்று நள்ளிரவுடன் அகற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகள் இன்று தமது இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன. 17 மாநகர சபை, ஒரு நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடவென 160 அரசியல் கட்சிகளும் 104 சுயேற்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 3813 வேட்பாளர்களும் 2675 சுயேற்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 6488 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்களிப்பு இன்று

எதிர் வரும்  எட்டாம் திகதி  நடை பெறவுள்ள  உள்ளூராட்சி மன்றங்களுக்கான  தபால் மூல  வாக்களிப்பு  தேர்தல் நடை பெறும் அனைத்து    இடங்களிலும் நடை பெற்றது.  இதன் பிரகாரம் கல்முனை  போலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற  தபால் வாக்களிப்பு  இன்று  நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தலைமையில் நடை பெற்றது.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  பதினெட்டு  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இன்று  வாக்களித்தனர்.

எயார்டெல் 3G சேவை கல்முனையில்..

எயார்டெல் தொலை தொடர்பு நிறுவனமானது தமது சேவையினை விஸ்தரிக்கும் முகமாக 3G சேவையினை கல்முனை மக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

3G சேவையின் மூலம் வீடியோ அழைப்புக்கள், துரித வேகமான இணைய வசதி போன்ற முக்கிய வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
 Sources if believed says that Airtel telecommunication network has provided 3G services to Kalmunai since (27.09.2011). But it is to notify that it is not officially launched but working perfectly.
So we hope the people of Kalmunai will experience the 3G coverage of Airtel.

தேசிய காங்கிரசின் தேர்தல் செயலகம் நட்பிட்டிமுனையில் திறந்து வைப்பு

எதிர் வரும் எட்டாம் திகதி நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தேர்தல் செயலகம் நட்பிட்டிமுனையில் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு போல் கல்முனையிலும் அபிவிருத்தி; பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்தார் : நிசாம் காரியப்பர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கும் பாதுகாப்பு செயலாளரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்குமிடையில் நடந்த சந்திப்பின்போது,
கொழும்பு மாநகரத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை போன்ற அபிவிருத்திப் பணிகளை கல்முனை மாநகரத்திலும் மேற்கொள்ள பாதுகாப்பு செயலாளரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தாக கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர்
தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை பாதுகாப்பமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்ததாகவும். அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்  பொதுமக்களுக்கு பெரிதும் பயணுள்ளது என பாதுகாப்பு செயலாளர் கூறியதாகவும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

அரசே விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு கொடு – த.வி.கூ. தீர்மானம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடு யாழ்ப்பாணம், நல்லூர் பரமேஸ்வரி மண்டபத்தில் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றுப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தம் வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமிய மக்கள் அவர்களின் வீடுகளில் மீள்குடியேற்றப்படவில்லை. தம் உடைமைகள் அனைத்தையும் கைவிட்டு சொற்ப பணத்துடனே சென்றனர். அவர்களுக்கு முறைப்படி நஷ்டஈடு கொடுத்து அரசே வீடுகளை அமைத்து கொடுக்க வேண்டும்.

தனிநாடு கோரிய மஹ்மூத் அப்பாஸிற்கு பெரும் வரவேற்பு

 hbuyஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தினை ஐ.நா.வின் உறுப்பு நாடாக அங்கீகரிக்குமாறு கோரும் பிரேரணையை மஹ்மூத் அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார்.
யூதக் குடியேற்றங்களை இஸ்ரேல் நிறுத்தாத வரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் கூறியுள்ளார். 1967 ஆண்டுக்கு முன்னரான பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க பாதுகாப்பு பேரவை ஆதரவு வழங்க வேண்டுமென நியூயோக்கில் வைத்து அவர் வலியுறுத்தியிருந்தார். 

மு. கா வின் ஸ்தாபகப் பூமியில்அபிவிருத்தி நடைபெறவில்லையே: அமைச்சர் ரிசாத்

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சபையைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் 11 வருட காலம் அபிவிருத்தியின்றி காணப்படும் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தியினை எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி முதல் எமது கட்சி பொறுப்பெடுக்கும் என பிரகடனம் செய்தார்.

கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனைக்குடி முற்சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மாநகர சபை வேட்பாளர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:-

நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதி நிர்மாணம்

ஜப்பானின் ஜெயிக்காத்திட்டத்தின் நிதியொதுக்கிட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி. நீர்ப்பாசனம். வீடமைப்பும் நிர்மாணம் . கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 69   மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதிக்கான அங்குராப்பண நிகழ்வு  வெள்ளிகிழமை காலை  இடம்பெற்றது.
இவ்வீதிக்கான நினைவுப்படிகத்தினை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சா ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் திட்டவரைபடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினா் எம்.எல்.ஏ.துல்சான்  மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தியமைச்சா் எம்.எஸ். உதுமாலெவ்வை ,கல்முனை மாநகர சபை வேட்பாளர்.ஏ.ஜி.நௌசாத் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

முதன்மை வேட்பாளர் நிசாம் காரியப்பரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். தனது கல்முனை இல்லத்தில் விஷேடமாக கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றினார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ். எஸ். பி. மஜீத்,  கே. எம். ஏ. ரஸாக்,  ஏ. எம். ஜெமீல் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக
பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோருடன் வேட்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

அளவ்வையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 25 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில், 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவளை இந்த விபத்து குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலும் பொல்காவையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலும் அம்பேபுஸ்ஸ நோக்கி பயணித்த ரயிலுமே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது.

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 11 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கல்முனையில் பல்வேறு நிகழ்வுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 11ஆவது ஆண்டு நினைவு தின பல்வேறு நிகழ்வுகள் இன்று வௌ்ளிக்கிழமை கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றன.முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முதன்மை வேட்பாளருமான நிஸாங் காரியப்பரின் தலைமையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு தற்போது நிரந்தர வீட்டுத்திட்டத்தில் வாழும் பல குடும்பங்களுக்கு தானம் வாழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இத்தினத்தையொட்டி இன்று மாலை கல்முனை பிரதான வீதியில் தலைவரின் இல்லத்திற்கு முன் நிஸாங்காரியப்பரின் தலைமையில் தலைவரின் ஞாபகார்த்த உரைக் கூட்டமும் இடம்பெற்றது.
நிஸாங்காரியப்பர் எம்.எச்.எம்.அஷ்ரபின் குடும்ப உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.