அபிவிருத்தி அரசியலையே மேற்கொள்ள வேண்டும்: மு.காவிடம் அப்துல் கலாம்!

IMG_6023

(றிப்தி அலி)

அபிவிருத்தி அரசியலையே இலங்கையில் மேற்கொள்ள வேண்டும் என உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிநூற்றாண்டு விழா!

5(573)

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கும் பாடசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் அமர்வு நேற்று பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கம்!- அப்துல் கலாம்

Dr‑APJ‑Abdul‑Kalam

சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்

ஈரானை இஸ்ரேல் தாக்கினால் உலகம் முழுவதும் போர் ஏற்படும்: சர்கோசி

iran nuclior

ஈரானை இஸ்ரேல் தாக்கினால் உலகம் முழுவதும் போர் ஏற்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ஏற்பாடு??

SriLanka_Flag

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவு, இதுவரை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி தமிழகத்தில் எங்குமே கொண்டாடப்படாத இலங்கையின் சுதந்திர தின விழாவை, முதல் முறையாக சென்னையில் நடத்த  ஏற்பாடு செய்து வருகின்றனராம்.

பிரிட்டனில் ஷரியா சட்ட நீதிமுறை

sharia-law-muslims-UK

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகறாறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.

‘வடக்கு கிழக்கு காணி சுற்றறிக்கை வாபஸ்’:சுமந்திரன்

east

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை நிர்வகிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுக்களை நியமிப்பதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.

ஈரானில் நிலநடுக்கம் 200 பேர் படுகாயம்: தொலை தொடர்ப்பு துண்டிப்பு

earthquake

டெக்ரான்: ஈரானின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நில நடுகத்தில் பெரும்பாலான கட்டடங்கள் நொறுங்கியுள்ளன. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நெய்ஷாபார் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்திற்கு அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

கடலில் கவிழ்ந்த சொகுசு கப்பல் நகருவதால் மீட்பு பணி நிறுத்தம்

rescue-efforts-suspended-as-co

இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கார்டியா என்ற சொகுசு கப்பல் அங்குள்ள தீவு அருகில் பாறையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிர் இழந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை. மீட்பு பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்நிலையில் கடலில் ஒரு பக்கமாக கவிழ்ந்து கிடக்கும் கப்பல் திடீரென்று நகர தொடங்கியது. இதனால் தீயணைப்பு படையினர் மீட்பு பணியை கைவிட்டனர்.

இலங்கை வெற்றி!

Sri Lanka's captain and batsman Tillakar

தென்னாபிரிக்காவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கிம்பர்ளி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிறுவர் விடுதி!

Untitled-1 copy

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் நவீன மயப்படுத்தப்பட்ட சிறுவர் விடுதி, மற்றும் புனரமைப்பு செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு(OPD) ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கல்வியை விற்க கல்விச்சாலைகள் ஒன்றும் வியாபாரக் கூடம் அல்ல-கலாம்

abdhul kalaam

கல்வி ஒருநாளும் வியாபாரப் பொருளாக இருக்க முடியாது என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் கல்வியை விற்க கல்விச்சாலைகள் ஒன்றும் வியாபாரக் கூடமும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக்கை பாதிக்கும் ராம்நிட் வைரஸ்கள்

Ramnit

பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனில் முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில் வரத் தொடங்கி உள்ளது.

இது தற்போது பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கணணிகளில் ஊடுருவி, அதிலுள்ள தகவல்களைத் திருடுவதுடன், கணணியையும் முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Seculert என்ற வைரஸ் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளது.

ஈரானைத் தாக்கினால்….. – ரஷ்யா எச்சரிக்கை!

iran nuclior

ஈரான் மீது போர் தொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பயன்பாட்டுக்கு வந்தது சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர்

Sunway BlueLight MPP

பீஜிங்: சீனாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரான சன்வே புளு லைட், தற்போது அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முற்றிலும் சீன தயாரிப்பான இந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஒரு நொடியில், ஆயிரம் டிரில்லியன் கணக்குகளை போடும் வல்லமை கொண்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர், 3 மாத சோதனை ஓட்டத்திற்குப்பின், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு இந்தியா 100 கோடி கல்வி உதவி: எஸ்.எம்.கிருஷ்ணா

sm-krishna

இந்தியாவின் உதவியுடன் காலே-ஹிக்கடுவா இடையேயான ரயில்வே பாலத்தை இலங்கை கட்டி முடித்துள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, அந்த ரயில் பாதையை இன்று (ஜன.19) துவக்கி வைத்து பேசியதாவது:-

ருஷ்டியின் இந்திய வருகை: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

salman_rushdie

புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதை தொடர்ந்து ராஜஸ்தான், டெல்லி மாநில போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு தொடர்பான எந்த பிரச்சனையை எதிர்கொள்ளவும், மோதல் சூழல் உருவாகும் வாய்ப்புள்ள அனைத்து பகுதிகளிலும் போதுமான போலீஸ் காவலை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் நாளை இலங்கை விஜயம்

abdhul kalaam

இந்தியாவின் முன்னாள் ஜனாதி பதியும், புகழ்பெற்ற அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நாளை இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் இவர் 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யில் நடைபெறும் மும்மொழி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். நாளை மாலை இலங்கை வரும் அப்துல் கலாம், மும்மொழித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் அதேவேளை, அன் றையதினம் பண்டாரநாயக்க சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் மாண வர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கவுள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவத் தலைவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் – அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

srilanka_university_students

நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக மாணவத் தலைவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக
அனைத்துபல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.