கட்டாக்காலி மாடுகளை பிடித்து தண்டப்பணம் அறவிட கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

Untitled-3

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் அறவிடும் நடைமுறையை எதிர்வரும் திங்கட்கிழமை (2011.12.05) தொடக்கம் நடைமுறைப்படுத்த கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் இன்று (02) கல்முனை மாநகர சபையில் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்டாக்காலியாக திரியும் மாடுகள் தெருவிலும், குடியிருப்பாளர்களின் இடங்களிலும் குறிப்பாக பிரதான வீதிகளிலும்

தென்கிழக்கு பல்கலைக்கழக கண்காட்சி

SEUSL (8)
(எஸ்.எல். மன்சூர்) 
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கண்காட்சி, பண்பாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும். இன்றைய தினத்தில் காலை பத்து மணிக்கு ஆரம்பமான கண்காட்சிக் கூடங்களுக்கு பாடசாலை மாணவர்களும், பெரியவர்களும் என அணிதிரண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சில திறந்தவெளி கலாசார நிகழ்வுகள் தவிர்ந்தவை மாலையில் ஆரம்பிக்கப்படும் எனக்கூறப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பல இடங்களில் காட்சிக்கூடங்கள் நிறுவப்பட்டிருந்தமை மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குறிப்பாக கலாசார அரும்பொருட்சாலை கூடம் சிறப்பாக இருந்தது. இலங்கையில் வாழ் முஸ்லிம் சமூகத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழ்ந்த முன்னோர்களது வளமார் முதுசங்களைப் பட்டியலிட்டு பாதுகாத்துக் கொண்டு அவற்றை எதிர்கால சந்ததிகளும் அறிந்து கொள்ளும்படி செய்துள்ளமை மிகவும் வரவேற்கக் கூடியதொரு அம்சமாகும்.

ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

sathaam_protest_02
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளி அழிவு ஏற்பட்டபோது ஈராக் உதவியுடன் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக இக்கிராமம் உருவாக்கப்பட்டது. அப்போது ஈராக் நாட்டின் அதிபராக சதாம் ஹுஸைன் பதவியிலிருந்தமையினால் இக்கிராமம் சதாம் ஹுஸைன் கிராமம் என மக்களால் பெயர் சூட்டப்பட்டது.

நாடாளுமன்ற குழுவில் அங்கம் வகிக்க போவதில்லை : சம்பந்தன் தெரிவிப்பு

r_sambandan
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அரசாங்கத்துடன் இடம் பெற்ற பேச்சுவார்தையின் போது இது தொடர்பாக தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும் இந்த அழைப்பினை தாம் நிராகரித்ததாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய மன்றத்தினால் பாடசாலை நூலகங்களுக்கு புத்தங்கள் அன்பளிப்பு

images

ஆசிய மன்றத்தினால் அம்பாறை மாவட்டதிலுள்ள பாடசாலை நூலகங்களுக்கு சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளதாக ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சி திட்ட அதிகாரி றிசாட் ஷெரீப் தெரிவித்தார்.

இதனடிப்படையில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள 62 பாடசாலைகளுக்கும் சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள 68 பாடசாலைகளுக்குமே புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படவுள்ளது  என அவர் குறிப்பிட்டார்.

இந்த புத்தகங்கள் மிக விரைவில் உரிய வலய கல்வி பணிப்பாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக றிசாட் ஷெரீப் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா தாக்கினால் திருப்பித் தாக்குவோம் பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி

13736_NewsPGMPHov

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் இராணுவ நிலைகளைத் தாக்கினால், திருப்பித் தாக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் இராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிடக்கூடாது – ஹக்கீம்

Hakeem
யுத்தம் முடிவடைந்து, சமாதானம் நிலவும் சூழ்நிலையில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண முற்படும் போது முஸ்லிம்களின் பரிமாணத்தை புறந்தள்ளிவிடாமல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதேவேளையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான பாராளு மன்ற தெரிவுக்குழு நியமனம் வரவேற்கத்தக்கதெனவும், அத்தெரிவுக்குழுவின் ஊடாக சிறந்த முடிவை எட்டக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாமெனவும் நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மை சந்தித்த ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியிடம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

cims 2
சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் கணினி துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.


யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் சிம்ஸ் கெம்பஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அன்வர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவன திட்ட அபிவிருத்தி முகாமையாளர் நேசராசா தம்பிராஜா பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனூசியா சேனாதிராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

சா்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள்

Aids-1
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)சா்வதேச  எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் நேற்று பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.

டிசம்பா் – 01 சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் தொற்று நோய் பிரிவும் பொத்தவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து எயிட்ஸ்

விழிப்புணர்வு ஊர்வலம் விழிப்பு கருத்தரங்கு மற்றும் எயிட்ஸ் தொடர்பான நூல் வெளியீட்டையும் மேற்கொண்டது.

தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட கார்

gold_car_002

நாளுக்கு நாள் தங்கத்தில் விலை நடுத்தர மக்களால் வாங்க இயலாத அளவிற்கு அதிகரித்து வருகின்றது.

நாம் அனைவரும் அதிசயக்கும் வகையில் பிரபல டாடா நிறுவனம் முழுவதும் தங்கத்தால் ஆன கார் ஒன்றினை வடிவமைத்துள்ளது. தற்போது வெளியிட்ட நனோ காரின் வடிவமைப்பை டாடா நிறுவனம் தங்கத்தில் உருவாக்கியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீட் சம்மாந்துறையில் காலமானார்

01

கிழக்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏம்.ஏ.அப்துல் மஜீட் இன்று இரவு சம்மாந்துறை அன்வார் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியாசலையில் காலமானார்.

இவர் 1960ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.

புடவை கைத்தொழில் அமைச்சர் மற்றும் அஞ்சல் துறை பிரதியமைச்சர் போன்ற பல பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

குழாய் நீர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

dewerw

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை பிரதேசத்தில் நீண்ட காலமாக  நிலவி வந்த குழாய் நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஆராயப்பட்டது.

உலகின் மிகப் பணக்கார கிராமம்!

kungumam_22

வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு.

ஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில் இருப்பவர்கள்கூட வேலை தேடி அங்கு ஓடிவருவார்கள்’ என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒரு சீன கிராமம். 2 ஆயிரம் பேர்கூட வசிக்காத ஒரு குக்கிராமத்துக்கு வந்து தங்கி 20 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அந்த கிராமத்தின் சாதனையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெள்ளி விழா இன்று

sri-lanka-muslim-congress_31

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது ஆண்டு பூர்த்தி விழா இன்று செவ்வாய்க்கிழமை புதிய நகர மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவவூத் ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

8 ஆசனம் கொண்ட ஆட்டோ இலங்கையில் அறிமுகமானது

untitledflk
சீன கம்பனியான SAAJ, எட்டு ஆசனங்களைக் கொண்ட முச்சக்கர வண்டியை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இடவசதி மற்றும் ஏனைய சிறப்பம்சம் காரணமாக, இதற்கு உள்ளுர் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என இதனை சந்தைப்படுத்துவோர் தெரிவித்துள்ளனர்.
250 CC கனவளவுள்ள என்ஜினையும் 13 லீட்டர் பெற்றோலை நிரப்பக் கூடிய பெற்றோல் தாங்கியையும் இது கொண்டுள்ளது. 400 கி.மீ. தூரத்திற்கு தொடர்ச்சியாக இதில் பயணம் செய்ய முடியும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அரபு லீக்

untitledaa
சிரியா மீது அராப்லீக் அமைப்பு பொருளாதார தடை விதித்தது. கடந்த 8 மாதங்களாக சிரியாவில் அதிபர் பஷர்அல்அசாத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. எனினும் சிரியா அதிபர் பதவிவிலக மறுத்து வருகிறார். ராணுவம்- பொதுமக்களிடையே நடந்து வரும் மோதலில் பலர் பலியாகி வருகிவ்ர்,
சிரியா வன்முறையால் இதுவரை 3,500 பேர் பலியாகியுள்ளனர். சர்வதேச சமூகம் வலியுறுத்தியும் அதிபர் பிடிவாதம காண்பிக்கிறார். இந்நிலையில் அராப் லீக் அமைப்பின் அவசரக்கூட்டம் எகிப்தின் கெய்ரோவில் கூடியது. , பொதுச்செயலர் துவக்கி வைத்து பேசினார். பின்னர் உறுப்புநாடான கத்தார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அகஹமத்பின்-ஜாஸிம் கூறுகையில், 

நேற்று திறக்கப் பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதலாவது விபத்து

reader12(1)
நேற்று மக்கள் பாவனைக்காக திறக்கப் பட்ட தக்ஷின தெற்கு  அதிவேக நெடுஞ்சாலையில்  இன்று திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில்  விபத்தொன்று சம்பவித்துள்ளது .
கொழும்பு நோக்கி  வானில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொறன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் முதலாவது தெற்கு  அதிவேக நெடுஞ்சாலை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக  திறந்துவைக்கப்பட்டது.

மாநகர உத்தியோஸ்தர்கள் லஞ்சம் பெற்றால் தூக்கி வீசப்படுவார்கள்: கல்முனை மேயர்

siraz-meerasahib

கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்காக  உத்தியோஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெற்றால், எதுவித முன்னறிவித்தலும் இன்றி பதவியில் இருந்து தூக்கி வீசப்படுவார்கள் என கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் சிறந்த மாநகர சபையாக கல்முனையை  மாற்றுவதே எனது பிரதான நோக்கமாகும். இதற்காக மாநகர சபையை மக்கள் மயப்படுத்துவதுடன் அனைத்து செயற்பாடுகளையும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

04

தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று 27ம் திகதி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவ்வீதியில் பயணித்த முதலாவது உத்தியோகபூர்வ நபர் என்ற பெருமையையும் ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.