இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிடக்கூடாது – ஹக்கீம்

Hakeem
யுத்தம் முடிவடைந்து, சமாதானம் நிலவும் சூழ்நிலையில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண முற்படும் போது முஸ்லிம்களின் பரிமாணத்தை புறந்தள்ளிவிடாமல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதேவேளையில், இனப்பிரச்சினை தீர்வுக்கான பாராளு மன்ற தெரிவுக்குழு நியமனம் வரவேற்கத்தக்கதெனவும், அத்தெரிவுக்குழுவின் ஊடாக சிறந்த முடிவை எட்டக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாமெனவும் நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தம்மை சந்தித்த ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷியிடம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

cims 2
சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் கணினி துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.


யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் சிம்ஸ் கெம்பஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அன்வர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவன திட்ட அபிவிருத்தி முகாமையாளர் நேசராசா தம்பிராஜா பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனூசியா சேனாதிராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

சா்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள்

Aids-1
( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)சா்வதேச  எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் நேற்று பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.

டிசம்பா் – 01 சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் தொற்று நோய் பிரிவும் பொத்தவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து எயிட்ஸ்

விழிப்புணர்வு ஊர்வலம் விழிப்பு கருத்தரங்கு மற்றும் எயிட்ஸ் தொடர்பான நூல் வெளியீட்டையும் மேற்கொண்டது.

தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட கார்

gold_car_002

நாளுக்கு நாள் தங்கத்தில் விலை நடுத்தர மக்களால் வாங்க இயலாத அளவிற்கு அதிகரித்து வருகின்றது.

நாம் அனைவரும் அதிசயக்கும் வகையில் பிரபல டாடா நிறுவனம் முழுவதும் தங்கத்தால் ஆன கார் ஒன்றினை வடிவமைத்துள்ளது. தற்போது வெளியிட்ட நனோ காரின் வடிவமைப்பை டாடா நிறுவனம் தங்கத்தில் உருவாக்கியுள்ளது. 

முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீட் சம்மாந்துறையில் காலமானார்

01

கிழக்கு மாகாணத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏம்.ஏ.அப்துல் மஜீட் இன்று இரவு சம்மாந்துறை அன்வார் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியாசலையில் காலமானார்.

இவர் 1960ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார்.

புடவை கைத்தொழில் அமைச்சர் மற்றும் அஞ்சல் துறை பிரதியமைச்சர் போன்ற பல பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

குழாய் நீர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

dewerw

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை பிரதேசத்தில் நீண்ட காலமாக  நிலவி வந்த குழாய் நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஆராயப்பட்டது.

உலகின் மிகப் பணக்கார கிராமம்!

kungumam_22

வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு.

ஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில் இருப்பவர்கள்கூட வேலை தேடி அங்கு ஓடிவருவார்கள்’ என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒரு சீன கிராமம். 2 ஆயிரம் பேர்கூட வசிக்காத ஒரு குக்கிராமத்துக்கு வந்து தங்கி 20 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அந்த கிராமத்தின் சாதனையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெள்ளி விழா இன்று

sri-lanka-muslim-congress_31

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது ஆண்டு பூர்த்தி விழா இன்று செவ்வாய்க்கிழமை புதிய நகர மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவவூத் ஆகியோர் விசேட உரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

8 ஆசனம் கொண்ட ஆட்டோ இலங்கையில் அறிமுகமானது

untitledflk
சீன கம்பனியான SAAJ, எட்டு ஆசனங்களைக் கொண்ட முச்சக்கர வண்டியை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இடவசதி மற்றும் ஏனைய சிறப்பம்சம் காரணமாக, இதற்கு உள்ளுர் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என இதனை சந்தைப்படுத்துவோர் தெரிவித்துள்ளனர்.
250 CC கனவளவுள்ள என்ஜினையும் 13 லீட்டர் பெற்றோலை நிரப்பக் கூடிய பெற்றோல் தாங்கியையும் இது கொண்டுள்ளது. 400 கி.மீ. தூரத்திற்கு தொடர்ச்சியாக இதில் பயணம் செய்ய முடியும் எனவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அரபு லீக்

untitledaa
சிரியா மீது அராப்லீக் அமைப்பு பொருளாதார தடை விதித்தது. கடந்த 8 மாதங்களாக சிரியாவில் அதிபர் பஷர்அல்அசாத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. எனினும் சிரியா அதிபர் பதவிவிலக மறுத்து வருகிறார். ராணுவம்- பொதுமக்களிடையே நடந்து வரும் மோதலில் பலர் பலியாகி வருகிவ்ர்,
சிரியா வன்முறையால் இதுவரை 3,500 பேர் பலியாகியுள்ளனர். சர்வதேச சமூகம் வலியுறுத்தியும் அதிபர் பிடிவாதம காண்பிக்கிறார். இந்நிலையில் அராப் லீக் அமைப்பின் அவசரக்கூட்டம் எகிப்தின் கெய்ரோவில் கூடியது. , பொதுச்செயலர் துவக்கி வைத்து பேசினார். பின்னர் உறுப்புநாடான கத்தார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அகஹமத்பின்-ஜாஸிம் கூறுகையில், 

நேற்று திறக்கப் பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதலாவது விபத்து

reader12(1)
நேற்று மக்கள் பாவனைக்காக திறக்கப் பட்ட தக்ஷின தெற்கு  அதிவேக நெடுஞ்சாலையில்  இன்று திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில்  விபத்தொன்று சம்பவித்துள்ளது .
கொழும்பு நோக்கி  வானில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொறன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் முதலாவது தெற்கு  அதிவேக நெடுஞ்சாலை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக  திறந்துவைக்கப்பட்டது.

மாநகர உத்தியோஸ்தர்கள் லஞ்சம் பெற்றால் தூக்கி வீசப்படுவார்கள்: கல்முனை மேயர்

siraz-meerasahib

கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்காக  உத்தியோஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெற்றால், எதுவித முன்னறிவித்தலும் இன்றி பதவியில் இருந்து தூக்கி வீசப்படுவார்கள் என கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் சிறந்த மாநகர சபையாக கல்முனையை  மாற்றுவதே எனது பிரதான நோக்கமாகும். இதற்காக மாநகர சபையை மக்கள் மயப்படுத்துவதுடன் அனைத்து செயற்பாடுகளையும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

04

தெற்கில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று 27ம் திகதி திறந்து வைத்தார். அதன் பின்னர் அவ்வீதியில் பயணித்த முதலாவது உத்தியோகபூர்வ நபர் என்ற பெருமையையும் ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.

துரைவந்தெய்திய மேடு மக்களை மீட்கும் பணியில் இராணுவத்தினருடன் கல்முனை மேயரும் களத்தில்

mayor 11

கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட துரைவந்தெய்திய மேடு மக்கள் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் அவர்களை படகு மூலம் மீட்பதற்கான படகு சேவையினை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதியின்  பணிப்புரைக்கமைய இராணுவத்தின் உயர் அதிகாரிகளாளன பிரிகேடியர் பிரசன்ன, மேஜர் பிரஸாத் உட்பட்ட இராணுவ  குழுவொன்று இன்று கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபை சந்தித்தது.

இச்சந்திப்பானது வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள கிட்டங்கி பாலத்தில் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றது.

அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு பிரதி மேயர் திடீர் விஜயம்!

002
கல்முனை அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு கல்முனை மாநகர பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
வைத்தியசாலையில் தற்போது நிலவும் குறைபாடுகளையும் தேவைகளையும் வைத்தியசாலை வைத்திய

அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் ஏனைய வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்ட பிரதி மேயர் குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும்  உறுதியளித்தார்.

சாய்ந்தமருது கடலில் முழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

3333

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை நீரில் முழ்கி மரணமடைந்தார்.இன்றுகாலை கடல் கொந்தழிப்பாக இருந்த வேளையில் நண்பர்களுடன் சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் பாரிய அலையில் இழுத்துச்செல்லப்பட்டதனாலேயே இவர் உயிரிழந்துள்ளார். இவருடன் குளித்துக் கொண்ருந்த நண்பர் உயிர் தப்பியுள்ளார்.
உயிரிழந்தவர் சாய்ந்தமருது பழைய மார்க்கட் வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மட் சியான் எனும் 27 வயதுடைய மேசன் தொழிலில் ஈடுபட்டுவந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கல்முனையில் வெள்ள பாதிப்பை சீராக்க பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் நடவடிக்கை

nisam_karriyappar
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மருதமுனை பாண்டிருப்பு சாய்ந்தமருது மாளிகைக்காடு காரைதீவு நிந்தவூர் ஒலுவில் பாலமுனை அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு்ள்ளது. இப்பகுதிகளில் இன்று தற்போதும் பெரும் மழை பெய்கிறது.
மாவடிப்பள்ளியில் உள்ள தாம்போதி மற்றும் கிட்டங்கி வீதி ஆகியவற்றின் மேலாக வெள்ளநீர் பரவுகின்றது. இதனால் மக்களின் அன்றாடப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாய்ந்தமருது பாண்டிருப்பு மருதமுனை புதிய குடியேற்றத் திட்டத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

காலி, மாத்தறையில் மினி சூறாவளி – கிழக்கில் வெள்ளம்

untitledw
தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் இடியுடன் கூடிய மழை மற்றும் மினி சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் மரம் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து தடங்கள் ஏற்பட்டுள்ளதோடு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 

கல்முனை வர்த்தக நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை

24112011341

கல்முனை மாநகரத்தில் சிறந்த நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை உடனுக்குடன் வழங்க கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

கடந்த காலங்களில் மாநகர சபை நடை முறைகளில்  இருந்துவந்த குறைபாடுகள் களையப்பட்டு முதல்வரினால் உடனடி தீர்வு வழங்கப் படுகின்றது.
கல்முனை மாநகரதுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வர்த்தகநிலையங்கள்,தொழில் நிலையங்களுக்கான வியாபார அனுமதிப் பத்திரம்,சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் என்பன முதல்வரின் நேரடி பரிசோதனையின் பின்னர் வழங்கப் படுகின்றன.